குளிர்காலத்தில் ஈசியாக உதடுகளை எப்படி பராமரிப்பது?

Published On:

| By Santhosh Raj Saravanan

How to easily care for lips in winter

குளிர்காலத்தில் வறண்ட குளிர் காற்று வீசுவதால் உதடுகள் மற்றும் சருமங்களில் வெடிப்புகள், கீறல்கள் தோன்றும். ஆனால் அதில் அதிக அளவு உதடுகள்தான் பாதிக்கப்படும். சில முறைகளை பின்பற்றுவதன் மூலம் குளிர் காலத்தில் கூட நம் உதடுகளை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். உதடுகளில் ஏற்படும் வெடிப்பை தடுக்க மற்றும் மென்மையாக வைத்திருக்க ரொம்ப ஈஸியான ஐந்து வழிமுறைகளை பார்ப்போம்

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

ADVERTISEMENT

உதட்டிற்கும் சரி சருமத்திற்கும் சரி அதிக அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமாகும். தண்ணீர் குடிப்பதன் மூலம் உதடுகள் வறட்சி அடையாமல் புத்துணர்வோடு இருக்க உதவுகிறது

உதட்டை நாக்கால் தடவ வேண்டாம்

ADVERTISEMENT

உதடு வெடிப்பு இருக்க கூடாது என்று பலரும் அடிக்கடி தன்னுடைய நாக்கால் உதட்டை ஈரம் செய்வது உண்டு. ஆனால் இந்த பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். மேலும் இப்படி நாக்கால் உதடை தடவி கொடுக்கும் போது உமிழ்நீர் தற்காலிகமாக உதடுக்கு ஈரம் கொடுக்கும். ஆனால் இந்த உமிழ்நீர் உதடு உலர்வாக இருப்பதை மேலும் மோசமாக்கும்.

லிப் பாம் பயன்படுத்தவும்:

ADVERTISEMENT

குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு போகும்போது அடிக்கடி லிப் பாம் பயன்படுத்துவது நல்லது. இது உதடுகளின் ஈரப்பதத்தை அதிகரிப்பதோடு எண்ணெய் பதத்தை தக்க வைக்கும். கடுமையான ரசாயனங்கள் மற்றும் சாயமில்லாத லிப் பாம் பயன்படுத்துவது நல்லது. வெயில் காலத்தில் முகத்திற்கு நாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோம். அதேபோல குளிர் காலத்தில் நாம் உதட்டிற்கு கூட spf நிறைந்த லிப் பம் பயன்படுத்துவது நல்லது

உதட்டு கீறல்கள் மற்றும் காயங்கள்

குளிர் காலத்தில் உதட்டில் கீறல்கள் மற்றும் காயம் ஏற்படும்போது நாம் அந்த கீறல்களை கையை வைத்து உரிக்கக் கூடாது. அப்படி செய்தால் அதில் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தன்னைத்தானே உதடு சரி செய்து கொள்ளும். ஆகவே, நாம் கை வைத்து மேலும் அதை காயப்படுத்த வேண்டாம்

புகைப்பிடிக்கக் கூடாது

புகைப்பிடித்தல் மற்றும் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது உதட்டு ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அதிக ரசாயனங்கள் உள்ள உதட்டுச் சாயங்களை தொடர்ந்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியம் மற்றும் உதடுகளின் நீர்சத்தையும் பாதிக்கும். தோல் மருத்துவரை ஒரு முறை அணுகி நம் உதட்டிற்கு எந்த மாதிரியான லிப் பாம் பயன்படுத்துவது என்பதை கேட்டுக் கொள்வது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share