பாடி ஷேமிங் பிரச்சினையை நம்மில் பலர் அதிகம் எதிர்கொள்கிறோம். இதைத் தவிர்க்க… நாம் யார் என்பதை அறிந்துகொண்டால் மற்றவர்களின் கருத்துகள் நம்மை பாதிக்காது. எனவே, நம் மீதான சுய மதிப்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, உங்களை மதிக்கிற, உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்மறை உணர்வுகள் கொண்டவர்களை சற்று தள்ளியே வைக்க வேண்டும்.
உங்கள் மனநிலையை மற்றவர்களின் உருவகேலி பாதிக்கும்பட்சத்தில் தயங்காமல் உளவியல் ஆலோசனை பெறவதில் தவறில்லை.
முக்கியமாக உங்களை நீங்களே அன்புடன் கையாள வேண்டும். தோற்றத்தைக் கடந்து ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்தவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில், இங்கு யாரும் இல்லை. ‘இது என்னுடைய வாழ்க்கை, என்னுடைய உடல்’ என்பதில் தெளிவாக இருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எதுக்கு அந்த ஆண்கள் தினம்? : அப்டேட் குமாரு
அதிமுகவிடம் 100 கோடி கேட்ட கட்சி எது? : திண்டுக்கல் சீனிவாசன் பதில்!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: உத்தரம்!
பெர்த்தில் முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி : கங்குலி வருத்தம்!