இள வயதிலேயே சிலருக்கு சருமம் மிகவும் வறண்டு போய்விடும். எந்த ஃபேர்னஸ் கிரீமையும் அவர்களின் சருமம் ஏற்றுக்கொள்ளாது. இதனால் தாழ்வுமனப்பான்மையில் இருப்பார்கள். மனிதர்களைச் சந்திப்பதையே தவிர்ப்பார்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உண்டா? ‘நிச்சயம் உண்டு” என்கிறார்கள் அரோமாதெரபிஸ்ட்ஸ்.
“முதலில் மலச்சிக்கல் இருக்கிறதா, உடல் சூடாக இருக்கிறதா என்று பாருங்கள். உள்ளங்கையை கன்னத்தில் வைத்துப் பாருங்கள்…
கதகதப்பாக உணர்கிறீர்கள் என்றால் உடலில் சூடு இருப்பதாக அர்த்தம். தலையில் எண்ணெய் வைத்து உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்துப் பாருங்கள். சூட்டை உணர்ந்தால் உங்கள் உடலில் சூடு இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
உடல் முழுவதும் இப்படி சூடாக இருக்கும் நிலையில் நீர் வறட்சி ஏற்படலாம். சருமம் பொலிவாக இருக்க நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் மிக முக்கியம்.
நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். காலையில் எழுந்ததும் காய்ச்சாத பால் எடுத்து, பஞ்சில் நனைத்து முகம், நெற்றி முழுக்கத் தடவித் துடைக்கவும்.
காய்ச்சாத பாலில் ஈரப்பதம் அதிகம். அதனால் சருமத்தின் ஆழத்தில் படிந்துள்ள அழுக்குகள் அகன்று சருமம் ஈரப்பதத்தைப் பெறும். பாலைத் தடவித் துடைத்ததும் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து பிறகு முகம் கழுவவும்.
ஓட்ஸை பொடித்து காய்ச்சாத பால் விட்டு, சில துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவி, வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இதன் மூலம் சருமத்தின் அடியில் படிந்த இறந்த செல்கள் நீங்கும். முகம் பொலிவாகும்.
அதிகாலையில் எழுந்ததும் தினமும் 2 டீஸ்பூன் நெய் சாப்பிடலாம். அது சரும வறட்சியைப் போக்கும். நெய் சாப்பிட்டால் உடல் பருமன் கூடுமோ என பயப்பட வேண்டாம்.
உருக்கிய நெய் சேர்த்துக்கொள்ளும்போது சருமம் ஈரப்பதம் இழக்காமல் இருக்கும். இப்படி வெறும் வயிற்றில் நெய் சாப்பிடப் பிடிக்காவிட்டாலும், சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
உருளைக்கிழங்கைக் கழுவி, துருவி சாறு எடுத்துக்கொள்ளவும். அதை அப்படியே சிறிது நேரம் வைத்திருந்தால் தண்ணீர் மேலே நிற்கும். ஸ்டார்ச் பகுதி அடியில் தங்கும்.
அந்த ஸ்டார்ச்சில் சில துளிகள் தேன், சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து கழுவுங்கள்.
இது உங்கள் சரும வறட்சியையும் போக்கும். சரும நிறத்தை ஒரு ஷேடு பிரைட்டாகவும் காட்டும்.
எக்காரணம் கொண்டும் சரும நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை மட்டும் வளர விடாதீர்கள்” என்று நம்பிக்கை அளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : காளான் மலபாரி!
இதுக்கு தகுதி நீக்கம் பண்ணுவாங்கலா?: அப்டேட் குமாரு
வங்கதேச கலவரம்: தாயகம் திரும்பிய 400 இந்தியர்கள்!
Paris olympics : வினேஷ் போகத் தகுதிநீக்கம்… ஒலிம்பிக் சங்கத்தின் அறிவிப்பால் அதிர்ச்சி!
