பியூட்டி டிப்ஸ்: அதீத வியர்வை… கட்டுப்படுத்துவது எப்படி?

Published On:

| By Selvam

கோடைக்காலத்தில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு சிலருக்கு உடல் முழுக்க அதீத வியர்வை வழிந்தோடும். இதற்கான காரணம் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?

உடலின் நச்சுகளை, கழிவுகளை வெளியேற்றவும், உடலின் வெப்பநிலையை பேலன்ஸ் செய்யவும் வியர்வை மிகவும் அவசியம். கோடையில் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்வைச் சுரப்பிகள் தூண்டப்பட்டு, வியர்வை அதிக அளவு சுரப்பதன் மூலம், நம் உடலின் குளிர்ச்சி தக்க வைக்கப்படுகிறது.

வியர்வை என்பது நபருக்கு நபர் வேறுபடும். வியர்வை அதிகமாகச் சுரப்பதும், குறைவாகச் சுரப்பதும் அவரவர் உடலிலுள்ள வியர்வைச் சுரப்பிகளின் செயல்பாட்டைப் பொறுத்தது. எனவே, உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம், வியர்வைச் சுரப்பிகளின் இயக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதன் விளைவாக, அளவுக்கதிகமாக வியர்ப்பதும் தடுக்கப்படும்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் தருணங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் குடிப்பதன் மூலம் உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்கும். உள்ளாடைகள், உடைகள், சாக்ஸ் என எல்லாமே ரொம்பவும் இறுக்கமாக இல்லாமல், தளர்வாகவும், காட்டனால் தயாரிக்கப்பட்டவையாகவும்  இருக்கும்படி பார்த்து அணியவும்.

அதீத வியர்வையைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. ஆனால், அந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதிகம் என நினைக்கும் வியர்வை, உண்மையிலேயே அதிகமானதுதானா என்பதை சரும மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அவரும் அதை அதிகம் என உறுதி செய்தால், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, மருந்து, மாத்திரைகளின் உதவியின்றி, இருமுறை குளிப்பது, பருத்தி உள்ளாடைகள் மற்றும் உடை அணிவது போன்ற எளிமையான வழிகளிலேயே அதீத வியர்வையைக் கட்டுப்படுத்த முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுட்டெரிக்கும் வெயில்…அமைச்சரின் இடைவிடாத பிரச்சாரம்

IPL 2024 : மீண்டும் போராடி தோற்ற பஞ்சாப்… த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

ரோடு ஷோக்கு இத பண்ணலாமோ? : அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: வாக்குக்கு பணம்… ஸ்டாலின் உத்தரவு – டென்ஷனில் அமைச்சர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share