தற்போது விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்த குளம், குட்டைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அதில் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைத்து வழிமுறையை எளிதாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில குளம், குட்டைகளில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் வேளாண் துறை அனுமதி பெறுவது, பொக்லைன் மற்றும் லாரி வாடகை தொகையை முன்கூட்டியே செலுத்துவது எனப் பல்வேறு கெடுபிடிகள் செய்யப்படுகிறது.
மண் எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் விவசாயிகள் மண் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைத்து வழிமுறையை எளிதாக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பருவமழை தொடங்கும் முன்னதாக நிபந்தனையற்ற அனுமதி வேண்டும் என்றும் உடுமலை வட்டார விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.
**-ராஜ்**