பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற டோனர் எது?

Published On:

| By christopher

மேக்கப்பில் டோனர் மிகவும் முக்கியமானது. சரும அழகைப் பராமரிப்பவர்களுக்கு சருமத்தில் உள்ள துவாரங்கள் பெரிய கவலையைக் கொடுக்கும். இதுபோன்ற துவாரங்கள் (Pores) கொண்ட சருமத்தைக் கொஞ்சம் டைட்டாக மாற்றுவதற்கு, அதன் துவாரங்களை மறைப்பதற்கு டோனர் அவசியம்.

டோனரை சருமத்துக்கான டானிக் என்றும் சொல்லலாம். சருமத்துக்கு ஊட்டம் கொடுப்பது போலவும் இருக்கும். க்ளென்ஸ் செய்யும்போது நம் சருமத்தில் இருக்கும் துவாரங்கள் எல்லாம் திறந்து கொள்ளும். இந்தத் துவாரங்களை மூடுவதற்கு டோனர் மிகவும் உதவியாக இருக்கும்.

சாதாரண சருமம் கொண்டவர்கள் பூக்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ரோஸ் வாட்டர், ஜாஸ்மின் வாட்டர், தாழம்பூ வாட்டர் போன்றவற்றை உபயோகிக்கலாம்.

சருமத்தில் எண்ணெய்ப்பசை கொண்டவர்களுக்கு பெப்பர்மின்ட் டோனர் பயன்படும். நிறைய பருக்கள் வருவதாகச் சொல்கிறவர்கள் ஆல்கஹால் கலந்த டோனர் பயன்படுத்தலாம். இதன்மூலம் எண்ணெய், அழுக்கு போன்றவை சருமத்தில் இருந்து நீங்கிவிடும். க்ளென்சிங்கால் திறந்துகொண்ட சரும துவாரங்களும் டைட்டாக மூடிக்கொள்ளும். சருமம் ஸ்மூத்தாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

ஆல்கஹால் கலந்த டோனர் சருமத்துக்கு செட் ஆகவில்லை என்றால் பிளெயின் டோனரும் பயன்படுத்திக் கொள்ளலாம். `ஆஸ்ட்ரின்ஜென்ட் டோனர்’ (Astringent toner) என்பது ஆண்களின் சருமத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். எண்ணெய்ப்பசையான சருமம் கொண்ட பெண்களும் இந்த ஆஸ்ட்ரின்ஜென்ட் டோனரை உபயோகிக்கலாம்.

டோனரை மிகவும் சிறிய அளவில்தான் உபயோகிக்க வேண்டும். ஒரு காட்டன் துணியில் சில துளிகள் எடுத்து முகத்தில் துடைத்தாலே போதும். க்ளென்ஸ் செய்த பிறகு காலை, மாலை இரண்டு வேளைகளிலுமே டோனரை உபயோகிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : பொங்கல் பரிசு வழங்கும் ஸ்டாலின் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வரை!

கிச்சன் கீர்த்தனா : பெஸ்டோ – பனீர் பொங்கல்

பாஜகவில் பதவிச் சண்டை… ஏழு மணி நேர பஞ்சாயத்து!

மாப்ள இவரு தான் ஆனா… அப்டேட் குமாரு

அப்படி என்ன இருக்கு புதன் கிழமையில?  டெல்லி தேர்தல் தேதியில் இப்படி ஒரு விசேஷம்!

கால தாமதம் ‘மத கஜ ராஜா’ வெற்றியைப் பாதிக்குமா?

வேலைவாய்ப்பு : வருமான வரித்துறையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share