பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக் தவிர்க்க முடியாத அழகு சாதனப் பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் லிப்ஸ்டிக் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
“லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
லிப்ஸ்டிக் உபயோகிக்கும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சினையின் அறிகுறியாக அமையும். அப்படிப்பட்ட லிப்ஸ்டிக்கைத் தவிருங்கள்.
அடர் நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவை அதிக அளவில் ரசாயனங்களின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்.
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
நச்சு இல்லாத அல்லது இயற்கை மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட லிப்ஸ்டிக் உபயோகிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். கர்ப்ப காலத்தில் லிப்ஸ்டிக் பூசுவதை தவிருங்கள். அது கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வாரத்தில் இரண்டு – மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் உபயோகிக்காதீர்கள்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி அரிசி உப்புமா!
புத்தாண்டில் பைக் ரேஸ்: 242 பைக்குகள் பறிமுதல்!