கண்களுக்கான கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது முதலில் அதன் ஃபிரேம் (Frame) எப்படிப்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு `மெட்டல் ஃபிரேம்'(Metal frame) உள்ள கண்ணாடியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். அது கடினமாக இருக்கும். எனவே, தவறுதலாகக் குழந்தை கீழே விழ நேர்ந்தால் மெட்டல் ஃபிரேம் முகத்தைக் கீறுவதற்கு வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த வகை கண்ணாடிகளில் `நோஸ் பேட்ஸ்’ (Nose pads) இருக்கும் என்பதால் இது மூக்கின் இரண்டு பக்கமும் அழுத்தி அழுத்தி தடம் விழும்.
எனவே, அவர்களுக்கு மெட்டல் ஃபிரே முக்கு பதிலாக `ஷெல் ஃபிரேம்’ (Shell frame) உள்ள கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது மேற்சொன்ன பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
தவிர, பிளாஸ்டிக் ஃபிரேம் கண்ணாடிகளும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், இவற்றைப் பயன்படுத்தினால் காலப்போக்கில் இது சருமத்தில் திட்டுகளை (Patches) உருவாக்குவதோடு மூக்கில் சரியாகப் பொருந்தியும் உட்காராது. இதனால் கண்ணாடியை அடிக்கடி இழுத்து இழுத்துவிட வேண்டியிருக்கும் என்பதால் இந்த வகை ஃபிரேம்களை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது.
ஷெல் ஃபிரேம்களைப் பொறுத்தவரையில் அது கண்களோடு கொஞ்சம் ஒட்டியே இருக்கும். சிலருக்கோ, கண் இமைகள் (Eye lashes) நீளமாக இருக்கும். அவர்கள் ஷெல் ஃபிரேம் அணிந்தால் நீளமாக இருக்கும் கண் இமை முடிகள் கண்ணாடியின் லென்ஸை தொட்டுக்கொண்டே இருக்கும்.
இதனால் அவர்கள் மிகவும் அசௌகர்யமாக உணர்வார்கள். அவர்களால் நிம்மதியாக எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது. எனவே, இவர்கள் ஷெல் ஃபிரேமுக்கு பதிலாக மெட்டல் ஃபிரேமை தேர்ந்தெடுப்பது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநரே இதெல்லாம் நியாயமா? – அப்டேட் குமாரு
அடுக்கடுக்காய் புகார்கள்… ஒ.செ.வை காப்பாற்றி அவரது மகனுக்கு பதவி கொடுத்த அமைச்சர் முத்துசாமி
ஜனவரி 11-ம் தேதி வரை தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்: முழு விவரம்!
ஹெல்த் டிப்ஸ்: காண்டம் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!
