பியூட்டி டிப்ஸ்: உங்கள் முகத்துக்கேற்ற புருவம் எது?

Published On:

| By christopher

The Best Eyebrow Shape

மேக்கப் தேவையில்லை. காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ் அவசியமில்லை. மாதம் தவறாமல் புருவங்களை திரெடிங் செய்தாலே முகம் வசீகரிக்கும்.

அடர்த்தியான, வடிவான புருவங்கள் ஒருவரது முகத்தோற்றத்தை நிச்சயம் மேம்படுத்தும். புருவங்களை ஷேப் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ…

ஐப்ரோ மேக்கப்

ஸ்டெப் 1: ஐப்ரோ சீப்பு பயன்படுத்தி புருவத்தைச் சீவி விடவும்.

ஸ்டெப் 2: டார்க் நிற ஐப்ரோ பவுடரை ஆங்குலர் பிரெஷ்ஷில் தொட்டு, புருவங்களின் கீழ்ப் பகுதியில் தேவையான அடர்த்திக்கு வரையவும்.

ஸ்டெப் 3: புருவங்களின் மேல் பகுதியையும் தேவையான அடர்த்திக்கு வரையவும்.

ஸ்டெப் 4: பிரவுன் நிற ஐப்ரோ மஸ்காராவைப் பயன்படுத்தி புருவ முடிகளை அடர்த்தியாக்கவும்.

ஸ்டெப் 5: இப்போது ஜெல் காஜலை புருவங்களின் மீது தடவினால், ஐப்ரோ மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.

நீள் வடிவ முகம்: நீங்கள் எந்த ஷேப்பில் வேண்டுமானாலும் புருவங்களை வரைந்து கொள்ளலாம்.

டைமண்ட் வடிவ முகம்: கட் இல்லாமல் ரவுண்டு ஷேப்பில் வரையவும்.

வட்ட வடிவ முகம்: புருவம் தொடங்கும் இடத்திலேயே சற்று மேல் தூக்கி திருத்தம் செய்து காஜலை வைத்து ஃபில்லிங் செய்ய வேண்டும். புருவ எலும்பு இருக்கும் இடத்தில் காஜலை அகலப்படுத்தி, ஆர்ச் வடிவம் கொடுக்கலாம்.

ஹார்ட்டின் வடிவ முகம்: புருவம் ஆரம்பிக்கும் இடத்தில் வளைவாகத் தொடங்கி, புருவ எலும்பு இருக்கும் இடத்தில் வில் போன்று வளைத்து அகலமாக வரைய வேண்டும்.

சதுர வடிவ முகம்: புருவம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்தே அடர்த்தியாக ஒரே அகலத்தில் வரையத் தொடங்கி, புருவ எலும்பு இருக்கும் இடத்தில் சற்று மெலிதாக காஜலால் ஃபில்லிங் செய்ய வேண்டும்.

புருவங்கள் அடர்த்தியாக வளர… ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து, லேசாகச் சூடாக்கி, இரவு நேரத்தில் புருவங்களில் தடவி, லேசாக மசாஜ் செய்யவும்.

மாதம் ஒரு முறை புருவங்களை ஷேப் செய்து விடுங்கள். முடி வளர்ச்சி அதிகமானால், திரெடிங் செய்யும்போது வலியும் அதிகமாகும்.

புருவங்களுக்கு கறுப்பு நிற காஜல் தவிர்த்து, டார்க் பிரவுன் நிறத்தைத் தேர்வு செய்யலாம். புருவங்களை வரைந்திருப்பது செயற்கையாகத் தெரியாமலிருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : ஓட்ஸ் பிஸ்கட்

IPL 2024 : அபார வெற்றி… ஹைதராபாத் அணியை பழி தீர்த்தது சென்னை!

“என்னது ரேஷன்ல கோதுமை பீரா?”: அப்டேட் குமாரு

ஐபிஎல் 2024: RCBக்கு 201 ரன்களை இலக்கு நிர்ணயித்த GT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share