வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு காரணத்துக்காக பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
சில பிரச்சினைகளுக்கு மருந்து, மாத்திரைகளோடு, பிசியோதெரபி சிகிச்சையையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்களே அறிவுறுத்துவதுண்டு.
அதைத் தாண்டி, முதுகுவலியோ, கழுத்துவலியோ வரும் போது, மருத்துவரை அணுகாமல், நேரடியாக பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்களும் இருக்கிறார்கள்.
இது ஆபத்து என்கிறார்கள் பிசியோதெரபிஸ்ட்டுகள். ஏன் என்பதற்கான காரணத்தையும் சொல்கிறார்கள்.
“சிலர் குறிப்பிட்ட பிரச்சினைக்காக மருத்துவரைப் பார்த்திருப்பார்கள். அவர் பரிந்துரைத்ததன் பேரில் பிசியோதெரபிஸ்ட்டை சந்திக்க வருவார்கள்.
இப்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, நேரடியாகவே பிசியோதெரபிஸ்ட்டை அணுகுவதும் அதிகரித்திருக்கிறது. யார், எப்படி அணுக வேண்டும் என்பதில் ஒரு தெளிவு அவசியம்.
நரம்பியல் பாதிப்புகளுக்கெல்லாம் முதலில் மருத்துவரையே அணுக வேண்டும். உதாரணத்துக்கு, பக்க வாதத்தால் பாதிக்கப்படுகிற ஒரு நபர், முதலில் நரம்பியல் மருத்து வரைத்தான் பார்க்க வேண்டும். மருத்துவர் அவருக்கான சிகிச்சைகளை முடித்த பிறகுதான், பிசியோதெரபிஸ்ட்டை பார்க்கச் சொல்வார்.
அதுவே, திடீரென ஏற்படும் முதுகுவலி, காலையில் எழுந்ததும் கால்களைத் தரையில் ஊன்ற முடியாத அளவுக்கு வலி… இப்படிப்பட்ட அறிகுறிகளுக்கு நேரடியாகவே பிசியோ தெர பிஸ்ட்டை அணுகலாம்.
ஒருவேளை அந்தப் பிரச்சினைகளுக்கு துறைசார் மருத்துவரின் ஆலோசனையும் சிகிச்சையும் தேவை என்றால், பிசியோதெரபிஸ்ட்டே சம்பந்தப்பட்ட மருத்துவரைப் பார்க்கும்படி சொல்வார். அது சம்பந்தப்பட்ட நபரின் பிரச்னை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து மாறும்.
சிலருக்கு ஐந்து நாள்கள் முதல் ஏழு நாள்கள் சிகிச்சையே போதுமானதாக இருக்கும். அதிலேயே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள்.
ஒன்றிரண்டு நாள்கள் மட்டும் பிசியோதெரபி எடுத்துக் கொண்டு, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியமாக இருப்பவர்களையும் பார்க்கிறோம்.
மருத்துவரோ, பிசியோ தெரபிஸ்ட்டோ பரிந்துரைக்கும் செஷனை முழுமையாக முடிக்க வேண்டும். தினமும் சிகிச்சை எடுக்க முடியாவிட்டாலும், வாரத் தில் 2-3 நாள்களாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த நாள்களில் எதைச் செய்ய லாம், எதைத் தவிர்க்க வேண்டும் என உங்களுக்கு அறிவுறுத்தப்படும். முடிந்த அளவுக்கு உங்கள் பிரச்சினையைத் தீவிரப்படுத்தும் எந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ஃப்ரெஷ் கோகனட் பிஸ்தா க்ரீம் வித் ஹோல் ஸ்ட்ராபெர்ரி
உசுரே நீ தானே… நீ தானே: அப்டேட் குமாரு
TNSTC தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு!
டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உண்டா, இல்லையா? கேட்டவரிடம் ஸ்டாலின் சொன்ன பதில்!