அசைவ உணவுகளை அதிக கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். அவற்றில் ஏற்படும் சிறு கவனக்குறைவுகூட சில நேரங்களில் உடல்நலத்தை பாதிக்கலாம். How to choose fresh mutton and chicken?
அசைவ உணவுகளை வாங்குவது, கையாள்வது, சமைப்பது வரையான பல்வேறு விஷயங்கள் சண்டே ஸ்பெஷலாக உங்களுக்காக…
பச்சையாகவோ, சமைத்தோ அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃப்ரிட்ஜில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால், புதிதாக வாங்கிச் சமைப்பது போன்ற ருசியும் வராது. அதன் தரமும், சத்துகளும் குறையும்.
விபத்தில் சிக்கியோ, நோய் தாக்குதலாலோ இறந்துபோன கால்நடைகளின் மாமிசத்தையும் சில இடங்களில் ஏமாற்றி விற்கிறார்கள்.
இறைச்சி பயன்பாட்டுக்காக கால்நடைகளை வெட்டும்போது அதிலிருக்கும் ரத்தம் உடனே வெளியேறிவிடும். ஏற்கெனவே இறந்து பல மணி நேரம் கழித்து வெட்டிய கால்நடை என்றால் அதில் ரத்தம் உறைந்த நிலையில் திட்டுத்திட்டாக ஆங்காங்கே படிந்திருக்கும். இதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
எந்த இறைச்சியாக இருந்தாலும் ஒரு விரலால் தொட்டு அழுத்திப் பார்க்க வேண்டும். அழுந்திய பகுதி மீண்டும் அதே நிலைக்கு வந்துவிட வேண்டும். அழுந்திய நிலையிலேயே இருந்தால் தரமில்லாதது.
ஆட்டின் எடை 8 கிலோவுக்குள் இருந்தால் இளம் ஆடாக இருக்கும். சமைக்கும்போது கறி எளிதில் வெந்துவிடும்.
எட்டு கிலோவுக்கு மேல் இருந்தால் அது முற்றிய இறைச்சியாக இருக் கும். எளிதில் வேகாது, சாப்பிடுவதற்கும் கடினமானதாகவும் இருக்கும்.
கடைகளில் ஏற்கெனவே சில மணி நேரம் அதைத் தொங்கவிட்டிருப்பார்கள். வீட்டுக்கு வாங்கி வந்து, கிச்சன் சிங்க்கின் அருகிலோ, ஃப்ரிட்ஜிலோ சில மணி நேரம் வைத்துவிடுவோம். ஓரிரு மணி நேரம் கழித்து சமைத்துச் சாப்பிடுவோம்.
செல்கள் சில மணி நேரம் தான் இறைச்சியில் உயிருடன் இருக்கும்.செல்கள் உயிருடன் இருக்கும் வரைதான் இறைச்சி ஃப்ரெஷ்ஷாக இருக்கும். எனவே, இறைச்சி வெட்டப்பட்ட ஐந்து முதல் ஆறு மணி நேரத்துக்குள் சமைத்துச் சாப்பிட்டு விட வேண்டும்.
ஃபிரெஷ்ஷாக இருக்கிறதா என்று நேரில் பார்த்து வாங்கிவிடலாம். ஆனால், ஆன்லைனில் அப்படி வாங்க முடியாது. அவற்றை வாங்குவதற்கான ஆப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் போட்டோவை பார்த்து தேர்வு செய்வோம்.
எனவே, அசைவ உணவு களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிடுவதை முடிந்தவரையில் தவிர்க்கவும்.”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…