சண்டே ஸ்பெஷல்: மாம்பழம் வாங்கப் போறீங்களா… இதை கவனிங்க!

Published On:

| By Selvam

மாம்பழங்களின் வருகை தொடங்கிவிட்டது. மாம்பழத்தில் சுவை மட்டுமல்ல, வைட்டமின் – ஏ மற்றும் வைட்டமின் – சி ஆகிய சத்துகளும் நிறைவாக உள்ளன.

இப்படி, சுவையும் சத்துகளும் ததும்ப இருக்கும், பழங்களின் அரசனான மாம்பழத்தை விரும்பாதவர்கள் பெரும்பாலும் யாரும் இல்லை என்றாலும்,

கல் வைத்துப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களைத் தவிர்த்து இயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களைக் கொஞ்சம் தேடிப் பிடித்து வாங்குங்கள்.

மாங்காய்களை பொதுவாக வைக்கோல் உள்ளிட்ட வெப்பம் தருபவற்றில் வைத்தால் எத்தி லீன் சுரப்பு மூலம் இரண்டு நாள்களில் நன்றாக பழுத்து சாப்பிட உகந்ததாக மாறும்.

சிக்கிரம் விற்றுவிட வேண்டும் என்று சில வியாபாரிகள் கார்பைடு கல் மூலம் மாம்பழங்களைப் பழுக்க வைக்கிறார்கள். கார்பைடு கல்லில் உள்ள அசிட்டிலீன் எனப்படும் வாயுவின் காரணமாக ஒரே நாளில் பழுத்த நிலையை அடையும்.

ஆனால், இது சாப்பிட உகந்தது அல்ல. வெம்பிப் பழுக்கும் நிலையைப் போன்றது. இதை சாப்பிட்டால் வயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும்.

கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் லேசான வெளிர் மஞ்சள் புள்ளிகளைக் காண முடியும். காம்பு பகுதியில் வெட்டிச் சாப்பிட்டு பார்த்தால் புளிப்புச் சுவையும், அதற்கான மணமும் வீசும்.

கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழம் என்றால், எல்லா பக்கமும் ஒரே மாதிரி சீராக மஞ்சள் நிறமாக இருக்கும். அதுவே, இயற்கையாகப் பழுத்த பழம் என்றால் பச்சையும் மஞ்சளுமாகக் கலந்திருக்கும். பழம் எந்தளவுக்குக் கனிந்திருக்கிறதோ, அந்தளவுக்கு வாசனையுடன் இருக்க வேண்டும்.

மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது ஒருவிதமான சுவை என்றால், அதை ஜூஸாகவும் போட்டுக் கொடுக்கலாம். ஆனால், அதில் ஐஸ் சேர்த்துக் குடிக்க வேண்டாம். நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், அளவோடு மாம்பழத்தை ருசிப்பதே ஆரோக்கியமானது.

பொதுவாக, மாம்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டால் அது உடலுக்கு சூட்டை விளைவிக்கும். எனவே, அதை அளவுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது.

மாம்பழத்துடன் பால் சேர்த்து மில்க் ஷேக் போலவும் பருகலாம். குழந்தைகளுக்கு இதைப் போலச் செய்து கொடுத்தால் அவர்கள் அதை மிகவும் விரும்பிக் குடிப்பார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி தோசை ரோல்

கிச்சன் கீர்த்தனா: முந்திரி சாக்கோ ரோல்

ஆ.ராசா தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி செயலிழப்பு… திக் திக் 20 நிமிடங்கள்!

சம்மர் சீசனில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share