நம்முடைய அழகுக்காக செயற்கை ரசாயன அழகுப் பொருட்களையே அதிக அளவு பயன்படுத்துகிறோம். மற்ற அழகு சாதனப் பொருட்களில் எந்த அளவுக்கு ரசாயனங்கள் உள்ளன என்று பெரும்பாலும் தெரிவதில்லை.
ஆனால், நகத்தை அழகுபடுத்த பயன்படும் நெயில் பாலிஷ் முழுக்க முழுக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் எனத் தெரிந்தும் துணிந்து பயன்படுத்துகிறோம். இது ஆரம்பத்தில் அழகாக இருந்தாலும், சில காலங்கள் கழித்து அழகுடன், ஆரோக்கியத்தையும் சீர்கேடு அடையச் செய்துவிடுகிறது.
இந்த நிலையில் இயற்கை நகப்பூச்சை பயன்படுத்துதல் நல்லது. இயற்கை நகப்பூச்சு என்பது மருதாணிதான். இதனை அரைத்து நகங்களில் பூசுவதால் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளில் இருந்து நகங்களையும் விரல்களையும் காப்பாற்றலாம்.
மேலும், நகங்களின் வளர்ச்சிக்கு கால்சியம், வைட்டமின் டி அவசியம். கால்சியம் பாலிலும், வைட்டமின் டி சூரிய ஒளியிலும் உள்ளன. இதன் குறைபாட்டால் நகங்களில் வெள்ளைப்பூ விழுதல், வறண்டு வெடித்து விடல், உடைதல் போன்றவை ஏற்படும்.
ஆரோக்கியமான நகத்துக்கு, பால், கேழ்வரகு, முருங்கைக்கீரை, பேரீச்சம் பழம், மாதுளை மற்றும் சிறுதானியங்கள் போன்ற கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து குறைவால் நகங்கள் வெடித்தல், உடைதலுடன், வளைதல் போன்றவை ஏற்படும். இதற்கு நாவல் பழம், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி கீரை மற்றும் திரிபலா சூரணம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பாத்திர சோப்புகள் மற்றும் பவுடர்கள், வேதிப்பொருட்களின் பயன்பாடு, உணவு உண்ணும் முன்பு, மலம் கழித்த பின்னர் கைகளை பலமுறை சோப்புபோட்டுக் கழுவ வேண்டும்.
பெண்கள் அதிகமாகத் தண்ணீரில் வேலை செய்வதால் நகச்சொத்தை, நகமுடைதல் போன்றவற்றில் இருந்து நகங்களைப் பாதுகாக்க ஈரத்தை துடைத்துவிட்டு நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
இரவு தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி முதல் மோடி – இலங்கை அதிபர் சந்திப்பு வரை!
கிச்சன் கீர்த்தனா : வல்லாரைச் சட்னி