முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய டிரெக்கிங் : நீங்களும் கலந்து கொள்ளலாம்!

Published On:

| By Raj

Trekking in Tamilnadu

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 40 இடங்களில் மலையேற்றம் செல்வதற்கான இணையவழி முன்பதிவு இணையதளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Trekking in Tamilnadu

இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் (TNWEC) மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் (TNFD) கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டது. Trekking in Tamilnadu

இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த ‘தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்’ வடிவமைக்கப்பட்டது.

எளிமையான, மிதமான, கடினமான மலையேற்றம் என மூன்றாகப் பிரித்து தமிழ்நாட்டின் மொத்தம் 40 இடங்களில் மலையேற்றத்தை மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்தது. திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தேனி, சேலம், திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த மலையேற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் பலரும், இப்போது வித்தியாசமான, சாகச அனுபவமான இந்த மலையேற்ற சுற்றுலா மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

மூன்று மாதங்கள் இந்தத் திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலில், “TrekTamilNadu திட்டத்தின் மூலம் மூன்று மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதில் 49.51 லட்சம் நேரடியாக பழங்குடி இளைஞர்களுக்குச் சென்று, சுற்றுலாவை சமூகங்களுக்கு அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த கோடை விடுமுறையில் மலையேற்றம் செய்ய விரும்புவோர் ‘https://trektamilnadu.com‘ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். ரூ.799 முதல் ரூ.3500, ரூ.4000 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Trekking in Tamilnadu

மேலும் விவரங்களுக்கு Tamil Nadu Wilderness Experiences Corporation, 6th Floor (Down), Panagal Maaligai, Jeenis Road, Saidapet, Chennai 600 015 மற்றும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5:30 மணிக்குள் 7418994333 தொடர்பு கொண்டு பயனடையலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share