ஹெல்த் டிப்ஸ்: கோடைக்கால நோய்கள்… தவிர்ப்பது எப்படி?

Published On:

| By Minnambalam Desk

ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலம் தொடங்கிய பிறகு நம்மில் பலர் கோடைக்கால நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் அதை தடுக்கும் முறை பற்றி விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள். How to avoid summer diseases?

“கோடைக்காலத்தில் பரவும் நோய்களை காற்றால் பரவும் நோய், நீரால் பரவும் நோய் என இரண்டாக வகைப்படுத்தலாம். How to avoid summer diseases?

காற்றால் பரவும் நோய்கள் வைரல் இன்ஃபெக்‌ஷன் எனப்படுகிறது. அம்மை நோய் இந்த ரகம்தான்.

வைரல் இன்ஃபெக்‌ஷனைத் தடுக்க சோஷியல் டிஸ்டன்சிங் கடைப்பிடிப்பது அடிக்கடி ஹேண்ட் வாஷ் செய்வது மாஸ்க் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். கோவிட்டுக்குப் பிறகும் மாஸ்க் அணிவது சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கைகளை சானிட்டைஸ் செய்வது போன்றவை நடைமுறையில் இருந்து வருகின்றன. இவை கோவிட் மட்டுமல்லாது காற்றால் பரவும் மற்ற நோய்களிலிருந்தும் பாதுகாப்பை அளிக்கின்றன என்றே கூறலாம்.

நீரால் பரவும் நோய்கள் லிஸ்ட்டில் அமீபியாசிஸ், பேதி, மலச்சிக்கல், காலரா போன்றவை இடம்பிடிக்கின்றன.

நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு. வெயில் காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். எனவே, நீர் வறட்சியை ஏற்படுத்தும் காபி, டீ போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அவற்றிலுள்ள அதிக கஃபைன் உடலில் சேரும்போது அல்சர், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்றவை ஏற்படலாம். குளிர்பானங்களுக்குப் பதிலாக இயற்கை பானங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும். நீர் வறட்சி ஏற்பட்ட பின் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்த்து முன்கூட்டியே இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

வெயில் காலத்தில் செரிமான பிரச்னை பலருக்கும் தொடர்கதையாகும். கூடுமானவரை கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவைத் தவிர்ப்பது செரிமான சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். கோடைக்காலத்தில் 40 டிகிரிக்கு மேல் வெயில் ஏற ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்படும். அதனால் தினசரி குறைந்தபட்சம் 3 முதல் 4 லிட்டர்கள் வரை நீர் அருந்துவது மிக அவசியம். குழந்தைகளை மதிய வேளைகளில் வெளியே விளையாட விடாமல், மாலை வேளைகளில் விளையாட அனுமதிக்கலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள். How to avoid summer diseases?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share