நீண்ட கோடை, மிகக் குறுகிய மழைக்காலம், மிதமான குளிர்காலம் கொண்ட மாநிலம்தான் தமிழ்நாடு. ஆனாலும், மார்கழிக் குளிரைப் பார்த்து இங்கு நிறையப் பேர் நடுங்குவார்கள்.
ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், மற்றும் வயதானவர்களைத் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும்.
இந்தக் குளிர் காலத்தில் சளி, தும்மல், இருமல், தலைவலி என்று அடுக்கடுக்காகப் பிரச்சினைகள் படை எடுத்து வரும். அவற்றில் ஒன்று தொண்டை வலி.
குளிர்காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்த்து அறையின் தட்பவெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.
நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டு, தொண்டைக் கட்டிக்கொள்ளும். இருமலும், வலியும் உண்டாகி, பேசுவதில் சிரமம் இருக்கும்.
இது தொடர்ந்தால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
சிலர் தொழில்ரீதியாக நிறையப் பேச வேண்டியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குக் குரலே பிரதானம். அவர்கள் குரலை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
அடி வயிற்றில் இருந்து காற்று வருவதைப்போல சுவாசத்தைப் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது; தொண்டையில் இருந்து காற்று வந்தால் நிச்சயம் பாதிப்பு இருக்கும்.
நீண்ட நேரம் பேசுகிற சந்தர்ப்பங்களில் இடையிடையே தண்ணீர் குடிக்க வேண்டும். கழுத்து நரம்புகள் புடைக்கும் அளவுக்குச் சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் குரல் பிரச்சினைகள் குறையும்.
அதிக சூடாகவோ, குளிர்ச்சியாகவோ உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பான்பராக், பாக்கு போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும் நபர்களின் அருகில்கூட நிற்க வேண்டாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வல்லாரைச் சட்னி
இது புதுசா இருக்குண்ணே… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை நோக்கி ஆதவ் அர்ஜுனா
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் முடிவுகள்… முழு விவரம்!
விமான நிலையம், மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்… கைதானவரின் பகீர் வாக்குமூலம்!