ஹெல்த் டிப்ஸ்: இளைஞர்களைத் தாக்கும் ஹார்ட் அட்டாக்: தவிர்ப்பது எப்படி?

Published On:

| By Kavi

பொதுவாக மாரடைப்பு என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிலும் பெண்களுக்கு அந்த ரிஸ்க் குறைவு என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனால், சமீப காலமாக இள வயதினரும் பெண்களும் மாரடைப்பு பாதித்து உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம்.

உண்மையில் அவர்களுக்கு என்னதான் நடக்கிறது? இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? இதைத் தவிர்ப்பது எப்படி?

ADVERTISEMENT

“இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், இதயத்தின் ரத்தக்குழாய்களின் அமைப்பு, மற்றும் அவற்றில் நடக்கும் மாறுதல்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதயத்தின் வலது, இடது பக்கங்களில் 2- 3 மில்லி மீட்டர் அளவில் இரண்டு இதய ரத்தக் குழாய்கள் இருக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜன், சர்க்கரை, மிக முக்கியமாக கொலஸ்ட்ரால் ஆகியவை இருக்க வேண்டும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்பது இல்லை என்றால் இதயம், மூளை என எல்லாமே செயலற்றுப் போய், மனிதன் இறந்துவிடுவான்.

ADVERTISEMENT

மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் வரைதான் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கும். எண்டார்ஃபின் (Endorphin ) என ஒரு ஹார்மோன் நம் உடலில் சுரக்கும். மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே சுரக்கக்கூடியது இது.

இந்த ஹார்மோன்தான் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை தக்கவைக்கிறது. மன அழுத்தம், கவலை என மனிதன் மகிழ்ச்சியை இழக்கும்போது அட்ரீனலின் (Adrenaline) என்ற ஹார்மோன் சுரக்கிறது.

ADVERTISEMENT

அந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் படியத் தொடங்கும். அப்படிப் படியும்போது, உங்களைக் காக்கும் கொலஸ்ட்ராலே, உங்களை அழிக்கும் கொலஸ்ட்ராலாக மாறுகிறது.

இதய ரத்தக்குழாயின் உள்ளே உள்ள லைனிங்கானது கண்ணாடிபோல ஸ்மூத்தாக இருக்கும். அப்படி இருக்கும்வரை ரத்தம் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கும். தீவிர ஸ்ட்ரெஸ்ஸுக்கு உள்ளாகும் நிலையில் எண்டார்ஃபினுக்கு பதில் அட்ரீனலின் சுரந்து, லைனிங்கில் சின்ன கீறல் விழும். அதனால் அந்த இடத்தில் ரத்தம் உறைந்துவிடும். இதற்கு ‘கொரோனரி த்ராம்போசிஸ்’ (Coronary Thrombosis) என்று பெயர்.

ரத்தத்தில் கொழுப்பு படிய 15-20 வருடங்கள் ஆகும் என்றாலும், இந்தக் கீறல் விழ சில நிமிடங்கள் போகும். உடனடியாக சிகிச்சை எடுத்தால் மட்டுமே இந்த நபரை காப்பாற்ற முடியும். சமீப காலத்தில் 20-25 வயதில் ஆண்களும், பெண்களும் மாரடைப்பில் இறப்பதற்கான முக்கிய காரணம் இதுதான்” என்று விளக்கமளிக்கும் இதயநல மருத்துவர்கள்… இதைத் தவிர்ப்பதை எப்படி என்பது குறித்த வழிமுறைகளைச் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய வெந்தய ரைத்தா!

டிஜிட்டல் திண்ணை: காங்கிரசுக்கு ஸ்டாலின் வைத்த செக்!

மாசம் ஒரு வாட்ஸப் குரூப் – அப்டேட் குமாரு

டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் கமலா… அதிபர் ரேஸில் முந்துவது யார்? அதிரடி சர்வே ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share