பியூட்டி டிப்ஸ்: கோடையில் சரும வறட்சி… தவிர்க்கலாம் சுலபமாக!

Published On:

| By Minnambalam Desk

நம்மில் சிலருக்கு ஏற்படும் சரும பாதிப்புகளில் முக்கியமானது சரும வறட்சி (Dry skin). தோற்றத்தில் மாற்றத்தோடு, மன வாட்டத்தையும் கொடுக்கக்கூடிய பிரச்சினை இது.

சரும வறட்சி என்பது பொதுவாக எல்லா வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் சற்று அதிகமாகவே பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டியவை குறித்தும் பட்டியலிடுகிறார்கள் சித்த மருத்துவர்கள்… Dry Skin in Summer

மா, நெல்லி, எலுமிச்சை – இலைகள், வெட்டிவேர், விலாமிச்சை வேர் – இவற்றுள் ஏதேனும் ஒன்று, ஊறிய நீரில் குளிக்கலாம்.

சோப்புக்கு பதிலாக, கடலை மாவு, பாசிப்பயறு மாவு, திரிபலா சூரணம், நலங்குமா போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கலாம்.

வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுத்து கொள்ளலாம்.

அதிகப்படியான வியர்வையைத் தவிர்க்கும், தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

போதுமான அளவு தண்ணீர் குடித்தல் அவசியம்.

நுங்கு, தர்பூசணி, பதநீர், இளநீர், மோர், பழச்சாறு போன்ற பானங்கள்… எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழ வகைகள்… மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, பசலைக்கீரை போன்ற வெப்பம் மற்றும் வறட்சியைக் குறைக்கும் கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

வெயிலில் அலைவதைக் கூடுமானவரை தவிர்ப்பதும் ஏசியின் உபயோகத்தைக் குறைத்துக் கொள்வதும் ஆரோக்கியமானது. Dry Skin in Summer

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share