பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில்தானே பலருக்கும் ஜலதோஷம் பிடிக்கும்…. சிலருக்கோ கொளுத்தும் கோடைக்காலத்தில்கூட ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். இதனால் கோடைக்கான ஐஸ்க்ரீம், கூல்டிரிங்க் போன்ற எதையும் சாப்பிட முடியாமல் ஏங்குவார்கள். இதற்கான காரணம் குறித்தும் தீர்வு பற்றியும் விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள். How to avoid colds in summer?
ஜலதோஷம் என்பது எந்த சீசனில் வேண்டுமானாலும் பிடிக்கலாம். குளிர்காலம், மழைக்காலம், வெயில்காலம் என எல்லாக் காலங்களிலும் ஜலதோஷம் பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் தொற்றுதான். இது ‘ரெஸ்பிரேட்டரி சின்சிஷியல் வைரஸ்’ (Respiratory syncytial virus ) அல்லது ‘அடினோ வைரஸ்’ ( Adenovirus) என எந்த வைரஸாகவும் இருக்கலாம். சிலர் எளிதில் இதுபோன்ற தொற்றுக்குள்ளாகிறவர்களாக இருப்பார்கள். அதாவது அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் எந்த சீசனிலும் தொற்றுக்குள்ளாகிவிடுவார்கள்.
இதுபோன்ற தொற்றுகள் வராமலிருக்கத்தான் வருடந்தோறும் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அது சளி, காய்ச்சல் பாதிப்பு தாக்காமல் பாதுகாப்பு கொடுக்கும். குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்பு வருகிறது என்றால், அலர்ஜி தொடர்பான பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா, ஆஸ்துமா பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள சூழல் காரணிகளாலும் இப்படி ஏற்படலாம்; உதாரணத்துக்கு, வீட்டுக்குள் வளர்க்கும் செல்லப்பிராணிகள், சாம்பிராணிப் புகை, தொழிற்சாலை புகை…. இப்படிப் பல காரணிகள் இந்த பாதிப்பைத் தூண்டலாம். எனவே, நீங்கள் உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகி, உங்கள் அறிகுறிகளைச் சொல்லி, ஜலதோஷம் பிடிப்பதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை பெறலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள். How to avoid colds in summer?