பியூட்டி டிப்ஸ்: தலைமுடியில் ஏற்படும்  துர்நாற்றத்தைத் தவிர்க்க!

Published On:

| By Selvam

பொதுவாக தலைமுடியில் துர்நாற்றம் என்பது வியர்வையினால் வரும் அல்லது தலையில் சுரக்கும் எண்ணெய் காரணமாகவும் வரலாம். கோடைக்காலத்தில் சிலருக்கு ஹெல்மெட் அணிவதாலும் வரலாம். அதனால் துர்நாற்றத்தை அனுபவிக்கலாம். இதை தவிர்க்க…

நெல்லிக்காய்களை வாங்கி அவற்றை நறுக்கி வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்ததும் அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். இதில் தண்ணீர் கலந்து தலைமுடி வேர்களில் தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து பின் எப்போதும் போல் தலைக்கு குளித்துவிடவும். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படிச் செய்து வந்தால் துர்நாற்றம் நீங்கும். மற்ற தலைமுடி பிரச்சினைகளும் சரியாகும்.

வறண்ட தலைமுடியை போக்க… தண்ணீர் கலக்காமல் தூய தேங்காய்ப்பால் எடுத்து வடிகட்டவும். அதில் பஞ்சை நனைத்து தலைமுடி வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் எப்போதும் போல் தலைக்கு குளித்தால் வறண்ட முடியில் ஏற்படும் துர்நாற்றமும் விலகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி இனிப்புக் கஞ்சி

CSKvsDC : டெல்லிக்கு முதல் வெற்றி… தோற்றாலும் தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

பலாப்பழத்த பிதுக்கிட்டாங்களே : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share