வேளாண், மீன்வளப் படிப்புகளில் சேருவது எப்படி? முழு விவரங்கள்!

Published On:

| By Kavi

How to Apply Agriculture and Fisheries courses

வேளாண், மீன்வளப் படிப்புகளில் சேருவது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி விரிவாகப் பேட்டியளித்துள்ளார். How to Apply Agriculture and Fisheries courses

கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ADVERTISEMENT

இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை பயில நினைக்கும் மாணவர்கள் ஒரேயொரு விண்ணப்பத்தை இணையவழியில் பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பத்தை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். மாணவர்களுக்கான வழி காட்டுதல்கள், மாணவர் சேர்க்கைக்கான வழி முறைகள் உள்ளிட்ட விவரங்களை www.tnau. ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக் கல்லூரிகளில் 14 பட்டப்படிப்புகளுக்கும் சேர்த்து 2,555 காலி இடங்களும், 28 இணைப்புக் கல்லூரிகளில் 2,806 காலியிடங்களும் உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு 240 இடங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 100 இடங்களும் உள்ளன. மீன்வளப் பல்கலைக் கழகத்தில் 6 பட்டப் படிப்புகள், 3 தொழில்கல்வி பட்டப்படிப்புகளில் மொத்தம் 345 இடங்களும், 57 சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

மாணவர்கள் வரும் ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். கலந்தாய்வுக்கான தேதி, செயல் முறைகள் போன்றவை பல்கலைக்கழக இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும்.

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 94886 35077, 94864 25076 என்ற எண்களிலும், மீன்வளப் பல்கலைக்கழகம் தொடர்பான விவரங்களுக்கு 04365 – 256430, 94426 01908 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெயிலா? கோடை மழையா? – அப்டேட் குமாரு

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் எப்போது?

செல்வி போட்ட போன்: சிஎம்சி விரைந்த ஸ்டாலின்… எப்படி இருக்கிறார் துரை தயாநிதி?

ராகுல் பேச்சில் 103 முறை அதானி, 30 முறை அம்பானி … மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share