தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸாக வெளிவர உள்ள படம் வேட்டையன். ஞானவேல் இயக்கத்தில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வரும் அக்டோபர் 10 – ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர் என பலர் நடித்துள்ளனர். தற்போது, டிரைலரும் வெளியாகியுள்ளது. டிரைலரில் வில்லனை சுட ஒரு வாரம் அதிகம், 3 நாட்கள் போதும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசும் பஞ்ச் வசனமும் அசத்தலாக இருக்கிறது.
ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து 34 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர். அதோடு அமிதாப் பச்சன் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாக வேட்டையன் அமைந்துள்ளது.
இந்த நிலையில், வேட்டையன் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் 100 முதல் 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவரின் முதல் தமிழ்ப்படம் இது. அமிதாப்க்கு 7 கோடி தான் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பகத் பாசிலுக்கு 4 கோடியும் ராணா டகுபதிக்கு 5 கோடியும் மஞ்சு வாரியாருக்கு 3 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
லைகா தயாரிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ படம் ஹிட் அடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரையும் கொன்றதா இஸ்ரேல்? நிலவரம் என்ன?
மீண்டும் ரூ.57,000ஐ நெருங்கிய தங்கம் விலை… அதிர்ச்சியில் மக்கள்!