IPL 2025 : நடப்பு ஐபிஎல் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. How MI RCB GT And PBKS Can move to top 2 finish
இந்த நிலையில் பிளே சுற்றுக்கு முன்னேறிய குஜராத், பஞ்சாப், பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய 4 அணிகள் முதல் இரண்டு இடத்துக்கு கடும் போட்டியிடுகின்றன. இந்த மோதலில் ஜெயிக்க நான்கு அணிகளுக்கும் உள்ள வாய்ப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐந்து முறை சாம்பியனான மும்பை அணிக்கு 16 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும்போது, பிபிகேஎஸ் தற்போது 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறது.
அவர்களைத் தவிர, குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
நேற்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடி குஜராத் அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக 83 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவி 18 புள்ளிகளுடன் முடித்தது.
எனவே புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறுவதற்கு, இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) போட்டி முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தைப் பிடிக்கும்.
அதன்படி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி வென்றால் 19 புள்ளிகளைப் பெறும். அதே நேரத்தில் மும்பை வென்றால் 18 புள்ளிகளைப் பெற்று முதல் இரண்டு இடங்களில் ஒன்றைப் பிடிக்கும்.
மற்றொரு இடம் நாளை நடைபெற பெங்களூரு – லக்னோ அணியின் போட்டி முடிவை பொறுத்து மாறும்.
அனைத்து அணிகளுக்கும் உள்ள வாய்ப்புகள் என்ன?

மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளிகள், +1.292 NRR)
🔵இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ரன்ரேட் அடிப்படையில் குஜராத்தை பின் தள்ளி முதல் இரண்டு இடங்களை உறுதி செய்யும்.
🔵தோல்வியடைந்தால், முதல் இரண்டு இடங்களுக்குள் வர வாய்ப்பில்லை.

பஞ்சாப் கிங்ஸ் (17 புள்ளிகள், +0.327 NRR)
🔴இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், 19 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் ஒன்றை உறுதி செய்யும்.
🔴தோல்வியடைந்தால், ஆர்சிபி மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்பதை நம்பியிருக்க வேண்டும்.

ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு (17 புள்ளிகள், +0.255 NRR)
🟠நாளைய போட்டியில் வெற்றி பெற்றால், 19 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்யும்.
🟠தோல்வியடைந்தாலும், முதல் இரண்டு இடங்களுள் வருவதற்கு பஞ்சாப் அணி, மும்பையிடம் தோற்க வேண்டும். அவர்கள் நெட் ரன்ரேட் குஜராத் அணியை விட அதிகமாக இருக்க வேண்டும்.

குஜராத் டைட்டனஸ் (18 புள்ளிகள், +0.254 NRR)
🟣சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால். இப்போது, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பு மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே குஜராத் அணிக்கு உள்ளது.
🟣முக்கியமாக நாளை நடைபெறும் போட்டியில் ஆர்.சி.பி படுமோசமாக தோற்க வேண்டும்.
இதனால் பிளேஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கு முன்னதாக இன்றும், நாளையும் நடைபெறும் கடைசி லீக் போட்டிகள் இரண்டும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்பதே உண்மை.