வைஃபை ஆன் செய்ததும், ’சேனைகள் வடக்கும் தெற்குமாக திரள்கின்றன’ என வசனம் பேசியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. பராசக்தி ‘பட’ பீலிங் ஓவரா இருக்கே?
நமக்கு எதுக்குய்யா சினிமா.. திமுகவில் அடுத்தடுத்து நடக்குற சந்திப்புகள், மாநாடுகளைப் பற்றி சொல்றேன்யா..
ஓஹோ.. இன்னைக்கு சிஎம் நடத்துன மீட்டிங்கா?
ஆமாய்யா.. திமுகவோட மண்டல பொறுப்பாளர்களான அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜின்னு எல்லாருடனும் சிஎம் ஸ்டாலின் இன்னைக்கு ஆலோசனை நடத்துனாரு..
இந்த ஆலோசனையை பத்தி நாம விசாரிச்சப்ப, “எல்லாரும் நம்பிக்கையா வேலை செஞ்சுகிட்டே இருங்க.. சர்வே ரிசல்ட்ஸ் எல்லாம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கு.. உங்க மாவட்டங்களில்ல கட்சிக்கு கெட்ட பேரை உருவாக்குறவங்களை சரி செஞ்சு வையுங்க.. ஒவ்வொரு மாவட்டத்தை பத்தியுமான PEN ரிப்போர்ட்டையும் உங்களுக்கு கொடுத்திருக்கேன்.. பார்த்துக்குங்க” என முதலில் பொதுவான அட்வைஸ் கொடுத்தார் சிஎம்.
அதுக்கு அப்புறமா ”ஜனவரி 26-ந் தேதி டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடக்குது.. அதுக்குப் பிறகு விருதுநகரில் தென் மண்ட இளைஞர் அணி சந்திப்பு நடக்கும்.. மார்ச் மாசத்துல திருச்சியில நம்ம மாநில மாநாடு நடத்துவோம்”னு கட்சியோட அஜெண்டாவை சொன்னார் சிஎம்.
இதை எல்லாம் பேசிகிட்டு இருக்கும் போதே, விஜய் பேக்டரை பத்தி எல்லாம் நாம கவலைப்பட வேண்டாம்.. நம்ம PEN டீம் ஒரு சர்வே எடுத்திருக்கு.. அதுல ஓவர் ஆலா விஜய்க்கு 18% ஓட்டு கிடைக்கும்னு சொல்றாங்க.. அதனால நமக்கு பாதிப்பு எதுவும் இருக்காது.. அதை பத்தி எல்லாம் நினைக்காம நாம நம்ம வேலையை சரியாக செஞ்சுகிட்டே இருப்போம்”னும் சிஎம் சொல்லி முடிக்கும் போது, காங்கிரஸ் பற்றிய பேச்சு எழுந்தது.
அதுக்கு, “அவங்க பேசிகிட்டே இருக்கட்டும்.. நாம நம்ம ஸ்டேண்ட்ல தெளிவாக இருக்கோம்.. அதிகாரப் பகிர்வு ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சிங்கிற எதுவுமே இல்லைங்கிறதுதான் நம்ம முடிவு.. அதனால அவங்க பேசுறதை எல்லாம் காதுல போட்டுக்கவும் வேணாம்.. பதில் சொல்லிகிட்டு இருக்கனும்னு அவசியமும் இல்லை”ன்னு கறாராக சொல்லி முடித்தார் சிஎம்” என்கின்றனர் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு அப்படியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.
