இன்று விநாயகர் சதுர்த்தி… தமிழ்நாட்டில் எத்தனை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன?

Published On:

| By vanangamudi

how many vinayagar idols are in tamilnadu 2025

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (ஆகஸ்ட் 27) விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. காலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் சிலைகள் அதிகமாக பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி பெற்று மொத்தம் 35,800 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த ஆண்டு அது 38,600 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1950 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சென்னை மாநகரத்தில் 1800 சிலைகளும், கன்னியாகுமரியில் 1650 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில் ராம்நாட்டில் குறைந்த பட்சமாக 102 விநாயர்கள் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share