அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 7) டெல்லி செல்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது.
ADVERTISEMENT
தமிழகத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்கிறார்.
இந்த பின்னணியில் தமிழகத்துக்கு 2 நாட்கள் பயணமாக அமித்ஷா கடந்த 4-ந் தேதி வருகை தந்தார். திருச்சியில் தங்கியிருந்த அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.
ADVERTISEMENT
இந்த சந்திப்பின் போது, அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் எத்தனை என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகளை முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் அமித்ஷா வீட்டில் இன்று இரவு நடைபெற உள்ளது. இதற்காக எஸ்.பி.வேலுமணி, நேற்றே டெல்லி சென்றுவிட்டார். இன்று பிற்பகல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ADVERTISEMENT
அமித்ஷாவை அவரது இல்லத்தில் இன்று இரவு எடப்பாடி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, அதிமுக- பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.