செந்தில் பாலாஜிக்கு சர்ஜரி எப்போது?: காவேரி மருத்துவமனை!

Published On:

| By Kavi

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரிக்கு முன்னதாக நடைபெறும் சோதனைகள் செய்யப்பட்டு வருவதாகக் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஜூன் 16) காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான அரவிந்தன் செல்வராஜ் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, 15 ஜூன் 2023 அன்று இதய நோய் அறிகுறிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் செந்தில் பாலாஜி உள்ளார். இதய பைபாஸ் அறுவை சிகிச்சை (சிஏபிஜி) செய்ய இக்குழு பரிந்துரைத்தது.
எனவே செந்தில் பாலாஜிக்கு மயக்க மருத்து கொடுக்க உடற்தகுதி இருக்கிறதா உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படவுள்ளன. அதன்பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா

ADVERTISEMENT

செந்தில் பாலாஜிக்கு கஷ்டடியா? ஜாமீனா? : மாலை தீர்ப்பு!

பாலியல் தொல்லை : ராஜேஷ் தாஸ் வழக்கின் தீர்ப்பு விவரம்!

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share