பிளாக் ஷீப்பின் ’நான் கோமாளி’ டிரைலர் எப்படி?

Published On:

| By christopher

பிரபல யூட்யூப் சேனல் ஆன பிளாக் ஷீப்பில் வெளியான “நான் கோமாளி” என்ற வெப் தொடரில் ஒவ்வொரு துறையிலும் கடினமாக உழைக்க கூடிய சாமானிய மனிதர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் நடித்து வந்த நடிகர் ராம் நிஷாந்த் இந்த தொடரின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் ராம் நிஷாந்த் “நான் கோமாளி” வெப் தொடரின் புதிய சீசனில் நடித்திருக்கிறார்.

விசாகன் ஜெயகதிர் இயக்கியுள்ள இந்த வெப் தொடரை பிளாக் ஷீப் தயாரித்துள்ளது.

இந்த புதிய சீசனில் நடிகர் ராம் நிஷாந்த் 10 வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த வெப் தொடரின் டிரைலரை பார்த்த நடிகர் சமுத்திரக்கனி படக் குழுவினரை பாராட்டிய வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி நான் கோமாளி தொடரின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இந்த டிரைலருக்கு, நடிகர் சமுத்திரக்கனி குரல் கொடுத்து இருக்கிறார். ஒரு 2000 ரூபாய் நோட்டு தனது நிலைமை குறித்து பேசுவது போல் இந்த டிரைலர் தொடங்குகிறது.

பஸ் கண்டக்டர், கேப் டிரைவர், மீனவர், போலீஸ் அதிகாரி, Common Man என 10 விதமான மனிதர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப் பட்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=PAwwICrG_H4

டிரைலரின் இறுதியில், 2000 ரூபாய் நோட்டின் ஆசை நிறைவேறியதா என்ற கேள்வி எழுகிறது, அதற்கு அந்த 2000 ரூபாய் நோட்டு, “அதுக்குள்ள தான் என்ன செல்லாத நோட்டுனு அறிவிச்சிட்டாங்களே” என்று கூறும் வசனத்துடன் டிரைலர் முடிகிறது.

நான் கோமாளி டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நிச்சயம் இந்த சீசனும் மக்களின் பாராட்டுக்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

”பொய் இயந்திரமாக மாறியுள்ளார்” : மோடிக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி!

மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டினாரா மாநகர திமுக செயலாளர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share