ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தக் லஃப் படத்தின் டிரெய்லர் இன்று (மே 17) வெளியாகி உள்ளது. how is kamal – maniratnam – simbu thuglife trailer
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறுவதையொட்டி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
’நீ என் உயிர காப்பாத்துனவன், எமன் கிட்ட இருந்து மீட்டெடுத்தவன்… இனி நீயும் நானும் ஒன்னு’ என கமல் உரையாடலுடன் டிரெய்லர் துவங்குகிறது.
அதன்பின்னர் சிம்பு, நாசர், அபிராமி, நாசர், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் காட்சிகள் திரையில் விரிகிறது.

’இனிமேல் நான் தான் இங்க ரங்கராய சக்திவேல்’ என தனது கூலியாட்களுக்கு சொல்வதன் மூலம் கமலுக்கு என்னாச்சு? எங்கே போனார் என்ற கேள்வியை எழச் செய்கிறது.
இறுதியில், ’எமனுக்கும் எனக்கும் நடக்கிற கத.. நீயா நானா வா’ என கமல் சிம்புவுடன் சண்டையிடும் காட்சிகளுடன் டிரெய்லர் முடிகிறது.
இதன்மூலம், கமலால் வளர்க்கப்பட்ட சிம்பு, ஒருகட்டத்தில் கமலின் காட் ஃபாதர் இடத்திற்கே ஆசைப்படுவதும், அப்போது கமலுக்கும் அவருக்கு இடையே மோதல் எப்படி முடிகிறது? என்பதே கதைக்களம் போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.
படத்தில் ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை விறுவிறுப்பையும், உணர்ச்சியையும் கொந்தளிக்கின்றன. பாலைவனம், செங்கோட்டை சண்டை, காதல் பரவசம் என ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் வேகம் கேமிராவில் தெரிகிறது. அதே போன்று படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் கட்டிங்கும் படத்தின் மீதான ஈர்ப்புக்கு வழிவகுக்கிறது.
டிரெய்லர் மூலம் இது நாயகன், தளபதி போன்ற கதையா என்ற தோற்றத்தை இயக்குநர் மணிரத்னம் ஏற்படுத்தினாலும், படத்தின் உரையாடல்களும், காட்சியமைப்பும், டிரெய்லரில் காட்டப்படும் பல்வேறு கதாப்பாத்திரங்களின் தாக்கமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.