ஹெல்த் டிப்ஸ்: நன்றாகத்தான் தூங்குகிறீர்களா? எப்படிக் கண்டறிவது?

Published On:

| By Minnambalam Desk

நாள் முழுவதும் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன் என்று கேட்ஜெட்டுகளுடனே வாழ்ந்து வருகிறோம். குறைந்தபட்சம் தூங்கும்போதாவது அவற்றைத் தவிர்ப்பது முக்கியம். இன்னும் சொல்லப்போனால் இதயத்துடிப்பு போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைக் கணிக்க சில உபகரணங்கள் உதவும்தான். How can I test my sleep quality?

ஆனால், போதுமான தூக்கம் என்பதை கேட்ஜெட்டுகளால் துல்லியமாகக் கணிக்க முடியாது. அந்தத் தகவல்களால் இன்னும் சரியாகத் தூங்கவில்லை என்ற கவலை வரும். பதற்றம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்த நிலையில், சராசரியாக 7 அல்லது 8 மணி நேரம் தூங்கினாலே போதுமானது. அதிக நேரம் தூங்கினால் நல்ல தூக்கம் என்று சொல்லிவிட முடியாது. தூங்கி எழுந்த பிறகு நீங்கள் புத்துணர்வாக உணர வேண்டும். 10 மணி நேரம் தூங்கியும் களைப்பாக உணர்ந்தால் ஆழ்ந்த தூக்கம் இல்லை என்றே அர்த்தம்.

அப்படி போதுமான தூக்கம் இல்லையென்று உணர்ந்தால் பொதுவான மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சிலருக்கு தூக்க குறைபாடு பிரச்சினைகள் இருக்கும், சிலர் அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளின் காரணமாக தூக்க பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். இவர்களுக்கும்கூட அவர்களது தூக்கத்தை பற்றிய ஓர் ஆய்வு தேவை. மருத்துவரீதியான உதவிகள் பற்றிய முடிவுகளையும் அதற்கேற்றாற்போல எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் பொதுநல மருத்துவர்கள். How can I test my sleep quality?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share