250 கி.மீ வேகம்… விபத்தில் அஜித்குமார் சிறு காயம் இல்லாமல் தப்பியது எப்படி?

Published On:

| By Kumaresan M

நடிகர் அஜித்குமாரின் கார் 250 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் வரும் 10 , 11, 12 ஆம் தேதிகளில் இந்த ஆண்டுக்கான 24H Dubai ரேஸ் நடைபெறுகிறது.இதற்காக, நேற்று அஜித்குமார் நேற்று பயிற்சியில் ஈடுபடுக் கொண்டிருந்தார். அப்போது, 250 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்தில் அஜித்குமாருக்கு சிறு காயங்கள் ஏற்படாமல் உயிர் தப்பியது அதிர்ஷ்டமான விஷயம்தான். கார் தீ பிடிக்காதது மற்றொரு அதிர்ஷ்டம் ஆகும். விபத்துக்கு பிறகு, மருத்துவக்குழுவினரும் அவரின் உடல்நிலையை சோதித்து எந்த காயமும் இல்லாததை உறுதி செய்தனர். இதையடுத்து இன்று (ஜனவரி 8 ஆம் தேதி )வழக்கம் போல அஜித்குமார் பயிற்சிக்கு திரும்பி விட்டார்.

நேற்று பயிற்சியின் போது, அஜித்குமார் Porsche 992 ரக காரில் பங்கேற்றார். துபாய் டிராக்கில் முதன்முறையாக அவர் பயிற்சியை தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித்தின் குழுவில் அவருடன் சேர்த்து 4 பேர் உள்ளனர். சர்வதேச அரங்கில் துபாய் ரேசில்தான் அஜித்குமார் குழு முதல்முறையாக களம் காண்கிறது .இந்த ரேஸை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு பல சர்வதேச ரேஸ்களில் அஜித்தின் குழு பங்கேற்க முடிவு செய்துள்ளது.

பொதுவாக கார் பந்தய வீரர்களின் உயிர் நிச்சயமில்லாதது. புகழ்பெற்ற பிரேசில் கார்பந்தய வீரர் ஆன்ட்ரியன் சென்னா. இவர், 1994 ஆம் ஆண்டு சான் மரினோ கிராண்ட் ப்ரீக்சில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. இது போல பல கார் பந்தய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஊனமுற்றுள்ளனர்.

அஜித்குமார் ரேஸிங் குழுவில் இடம் பெற்றுள்ள சக வீரரான ஃபேபியன் டுஃபியக்ஸ் இந்த விபத்து குறித்து கூறியதாவது, ‘கற்று கொள்வதற்கான பயணம் என்பதை சுட்டிக்காட்டும் நாளாக அஜித் விபத்தில் சிக்கியது அமைந்துவிட்டது. இடையூறுகள் எதுவாக இருந்தாலும் ரேஸிங் மீது எங்களுக்கு உள்ள ஆர்வம் குறையவில்லை. ஒவ்வொரு அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்கிறோம். அணியாகவும் குடும்பமாகவும் பிரச்னைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம்” என்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

யார் அந்த சார்? ஞானசேகரன் யார்?: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

வேணுகோபால் … இது ஒரு சீனரின் பெயர் :பின்னணியில் சுவாரஸ்யம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share