கர்நாடகாவில் சிகரெட் விற்பனைக்குக் கட்டுப்பாடு:  ஹூக்கா பார்களுக்கு தடை! 

Published On:

| By Selvam

கர்நாடகா மாநிலத்தில் சிகரெட் விற்பனைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவையும்,  ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவையும் கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது.

தடையை மீறும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) திருத்தம் செய்யப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும், புகையிலை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்காக இந்தத் திருத்தப்பட்ட மசோதா பொது இடங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ADVERTISEMENT

இந்த மாதத் தொடக்கத்தில் தெலங்கானா அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களையும் தடை செய்ய  இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியது. கடந்த ஆண்டு, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹூக்காவை வழங்க அம்மாநில அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஹெல்த் டிப்ஸ்: அதிக அளவு பப்பாளிப்பழம் சாப்பிடுவது: ஆரோக்கியமா? ஆபத்தா?

கிச்சன் கீர்த்தனா: மட்டன் கறி ஆனம்

அண்ணாமலையின் கதவு, ஜன்னல் அண்ட்…. ; அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share