சம்மர் ஹாலிடே வீக் எண்ட்டில் வெளியே சுற்ற நினைப்பவர்கள்… வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க நிச்சயம் ஜூஸ் அருந்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே சத்தான இந்த மிக்ஸ்டு ஜிஞ்சர் ஜூஸ் அருந்திவிட்டுச் செல்லலாம். சம்மர் ஹாலிடேயை கூலாக கொண்டாடலாம்.
என்ன தேவை?
ஆரஞ்சு – ஒன்று (உரித்து தோல், விதை நீக்கவும்)
பைனாப்பிள் – 2 ஸ்லைஸ் (நறுக்கவும்)
இஞ்சி – சிறு துண்டு
சர்க்கரை – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஆரஞ்சு, பைனாப்பிளுடன் சர்க்கரை, தோல் சீவி நறுக்கிய இஞ்சி சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, ஐஸ் க்யூப் போட்டுப் பரிமாறலாம்.
ஜூஸ் திக்காக இருந்தால், சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…