“சருமம், கூந்தலைப் பராமரிப்பது போலவே, உதட்டைப் பராமரிப்பதும் அவசியம்’’ என்கிறார்கள் பியூட்டி தெரபிஸ்ட்ஸ்…
“நம்மில் பலருக்கு உதட்டில் வெடிப்பு உண்டாகும் பிரச்சினை இருக்கலாம். சிலருக்கு அதில் ரத்தம்கூட வரும். இன்னும் சிலர், வெடித்த உதடுகளில் பிரியும் சதையைப் பல்லால் கடித்துக் கடித்து எடுப்பார்கள்.
இப்படிச் செய்வதால் உதடு கறுத்து விடும். வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு, புற ஊதாக் கதிர்கள் பாதிப்பால் உதட்டில் கரும்புள்ளிகள்போலத் தோன்றலாம்.
மேலும், தொடர்ச்சியாக லிப்ஸ்டிக் பயன்படுத்துவதாலும், தரமற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்துவதாலும் உதட்டில் சிலருக்குப் பிரச்சினை உண்டாகலாம்.
குறிப்பாக, டார்க் வயலெட், டார்க் ரெட், டார்க் பிரவுன் போன்ற அடர் நிற லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்துகிறவர்களுக்கு உதடு பிரவுன் நிறத்தில் மாறிவிடும். அதன்பிறகு, லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது.
இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க, லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்னால் லிப் பிரைமர் (Lip Primer) பயன்படுத்தி அதன் பின்னர் லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் உதட்டில் பிக்மென்டேஷன் பிரச்சினை வராமல் தடுக்க முடியும்.
இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வாக, இயற்கையான முறையில் லிப் பாம் தயாரித்து உதட்டுக்குப் பயன்படுத்தலாம்” என்று கூறுபவர்கள் ஹோம்மேடு லிப் பாம் தயாரிக்கும் வழிமுறையையும் சொல்கிறார்கள்.
“இரண்டு ஸ்பூன் அளவுக்கு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், கற்றாழையின் சதைப்பகுதி அல்லது கற்றாழை ஜூஸ் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்குங்கள்.
அடுத்ததாக, ஒரு சிட்டிகை ரோஜா இதழ் பவுடர், ஒரு சிட்டிகை பீட்ரூட் பவுடர் மற்றும் இரண்டு, மூன்று சொட்டுகள் பீட்ரூட் சாறு ஆகியவற்றை இந்தக் கலவையில் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இக்கலவையை ஃபிரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் அரைமணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்து எடுங்கள். லிப் பாம் ரெடி.
குழந்தைகள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.
லிப் பாம் தயாரிக்கக் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் கைவசம் இல்லையென்றாலும் கவலை வேண்டாம்.
தினமும் பூஜைக்காக வாங்குகிற ரோஜா பூக்களின் இதழ்களை கசக்கி, அவற்றிலிருந்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயில் கலந்துகொள்ளுங்கள்.
அதேபோல, ஒரு சிறிய துண்டு பீட்ரூட்டை துருவி அதிலிருந்தும் சாறு எடுத்து, இவற்றுடன் சேருங்கள்.
இந்த மூன்றையும் நன்கு கலந்து ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால்.. லிப் பாம் ரெடி.
இந்த லிப் பாம் உதட்டில் போட்டுவரும்போது கருமை, உதடு வெடிப்பு போன்றவை வராமல் தடுக்க முடியும்” என்று விளக்கமளித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பேரீச்சம்பழம் கேரட் சாலட்
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… அதிமுக – பாமக கூட்டணி! திமுக வைக்கும் திடீர் ட்விஸ்ட்!
உனக்கும் அது தெரிஞ்சு போச்சா? அப்டேட் குமாரு
சென்னை: நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து… அலறியடித்து ஓடிய பயணிகள்!