பியூட்டி டிப்ஸ்: கோடைக்கேற்ற ஹேர் கண்டிஷனர்… நீங்களே தயாரிக்கலாம்!

Published On:

| By Minnambalam Desk

கோடைக்காலத்தில் தலைமுடியை சீராக பராமரிக்க வாரத்துக்கு மூன்று முறையாவது ஷாம்பூ பயன்படுத்துகிறோம். அடுத்து, தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தி சரியாக பராமரிக்க வேண்டுமென்றால் ஹேர் கண்டிஷனர் அவசியமாகிறது.

இவை கோடையில் கூந்தலில் ஏற்படும் வறட்சியைப் போக்கி தலைமுடியை சாஃப்டாக மாற்றி கட்டுப்படுத்த உதவும். இதனால் முடி உதிர்வு பிரச்சினை குறையும்.

எனினும், கடையில் விற்கப்படும் கண்டிஷனர்களில் அதிகமான ரசாயனங்கள் இல்லாமல் பார்த்து பயன்படுத்த வேண்டிய நிலையில், ரசாயனங்களே இல்லாமல் வீட்டிலேயே கண்டிஷனரை தயாரித்து நாம் பயன்படுத்தலாம். இதைச் செய்வதும் மிக சுலபமாக இருக்கும். 

நம் தலைமுடிக்கு தேவையான அளவு செம்பருத்தி இலைகள் மற்றும் பூவை எடுத்து சாதம் வடித்த கஞ்சியுடன் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்தால் சூப்பரான ஹோம்மேட் கண்டிஷனர் தயாராகி விடும். Homemade hair conditioner 2025

இதை  தலைமுடியில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்திருந்து பின்னர் கழுவி விடலாம். இப்படிச் செய்தால் நம் தலைமுடி பளபளப்பாகவும், சாஃப்டாகவும் இருக்கும். மேலும், முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். Homemade hair conditioner 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share