அடர்த்தியாக இருந்த புருவத்தில் முடி உதிர்வு இருந்தால் தலையில் வரும் பொடுகும் ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதுமே குறைவாக இருந்தால் அதற்கு மரபுரீதியான காரணம் இருக்கும்.
புருவம் அழகுடன் அடர்த்தியாக இருக்க, விளக்கெண்ணெயில் ஒருநாள் முழுக்க ஐப்ரோ பென்சிலின் முனை படும்படி ஊறவைக்கவும். இரவு பென்சிலால் அப்ளை செய்துவிட்டு தூங்கவும். தொடர்ந்து இப்படிச் செய்வதால் புருவம் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்கும்.
பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் தேவையற்ற முடிகள் வளர ஆரம்பிக்கின்றன. சில பெண்களுக்கு அதிக அளவில் வளர்ந்திருக்கும்.
குப்பைமேனி இலைப்பொடி, கோரைக்கிழங்குப் பொடி, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள்தூள், அடுப்புச் சாம்பல் ஆகியவற்றைத் தலா 50 கிராம் அளவு எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கலக்கவும்.
மொத்தமாகக் கலந்த பவுடரில் இருந்து அரை டீஸ்பூன் எடுத்து, அதில் 10 சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து தேவையற்ற முடிகள் உள்ள பகுதியில் தேய்க்கவும். காய்ந்ததும் நன்கு அழுத்தித் தேய்க்க, முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து உதிர்ந்துவிடும். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்துவர… முழுமையான பலன் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மொறு மொறு ஸ்வாலி
டிஜிட்டல் திண்ணை: மோடி வருகை- மூன்றாவது அணிக்கு அச்சாரமா? வேட்பாளர் தேர்வில் எடப்பாடி
தளபதி நடிக்கும் ஹாலிவுட் படம்: அப்டேட் குமாரு
நிவின் பாலி வயது 8,822… அசர வைக்கும் “ஏழு கடல் ஏழு மலை” வீடியோ!