பியூட்டி டிப்ஸ்: வெயிலால் ஏற்படும் வேனிற்கட்டிகள்… தீர்வு என்ன?

Published On:

| By Selvam

கோடைக்காலத்தில் பொதுவாகவே தோல் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவற்றில் பரவலாக பலரையும் பாதிக்கக்கூடியது வியர்க்குரு. சில வேளைகளில் அவை கொப்புளங்களாக காணப்படும்போது, கோடைக் கொப்புளம் என்றும், கட்டிபோல் காணப்படும்போது, கோடைக்கட்டி அல்லது வேனிற்கட்டி என்றும் சொல்லப்படுகிறது. பாலின பேதமின்றி, வயது வரம்பின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய இந்த வேனிற்கட்டிகள் சீக்கிரம் குணமாக எளிய தீர்வுகள் இதோ…

அந்திமல்லி இலை, ஆமணக்கு இலை, முடக்கத்தான் இலை… இவற்றுள் ஏதாவது ஒன்றை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி மேலே வைத்துக் கட்ட, கட்டிகள் சீக்கிரம் உடையும்.

கடுகை அரைத்துத் தடவலாம்.

நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் காக்கைக் கொல்லி விதையைப் பொடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவலாம்.

முக்கியமாக, வேனிற்கட்டிகள் உடைந்த பிறகு புண் ஆற்றும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த வேனிற்கட்டிகள் வராமல் இருக்க…

இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆபரணங்களையும் முடிந்தவரை தவிர்க்கலாம்.

தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர வெயிலில் செல்ல வேண்டாம்.

குழந்தைகள் வெயிலில் அதிகம் விளையாடுவதைத் தவிர்த்து அவர்களுடன் முடிந்த அளவு நம் நேரத்தைச் செலவழிக்கலாம்.

கொப்புளங்கள் வெடித்து நீர் வடிதல், சீழ் வைத்தல் போன்றவை ஏற்படுமாயின், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GTvsPBKS : சாய் கிஷோர் பந்துவீச்சில் பணிந்தது பஞ்சாப்!

இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி வெறுப்பு பேச்சு : குவியும் கண்டனங்கள்!

பியூட்டி டிப்ஸ்: சூரிய கதிர்களிடமிருந்து சருமத்தைக் காக்கும் கற்றாழை ஜெல்!

’ஆர்சிபி ஆசீர்வாதம் வேணுமா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share