முகம் மற்றும் கேசப் பராமரிப்புபோல, உதடுகளுக்கான பராமரிப்பும் முக்கியம். சருமத்துக்கு மட்டும் பராமரிப்பைக் கொடுத்துவிட்டு உதடுகளை சரிவர கவனிக்காவிட்டால் முகத்தின் அழகு முழுமையாக வெளிப்படாது.
இதழ்களை அழகாக்க லிப்ஸ்டிக்தான் வழி என்று இல்லை. இயற்கையான வழிகளில் இதழ்களை பொலிவூட்டலாம் என்கிறார்கள் பியூட்டி தெரபிஸ்ட்ஸ்.
முதலில் உதட்டை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்து சர்க்கரை இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் இரண்டையும் கலந்து உதட்டில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை தேய்க்கவும்.
இதனால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும். பின்னர் நல்ல காட்டன் துணி அல்லது டிஷ்யூ கொண்டு உதட்டை துடைத்துக்கொள்ளவும்.
நன்றாக அரைத்த கேரட் மற்றும் பீட்ருட் இரண்டையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் மற்றும் பாதாம் எண்ணெய் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையை மாஸ்க் போல உதட்டின் மீது அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின் துடைத்து எடுக்கவும்.
அடுத்ததாக கேரட் அல்லது பீட்ரூட் ஜூஸ் சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். வெண்ணெயை கொஞ்சமாக சூடுபடுத்திக்கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் கேரட் அல்லது பீட்ரூட் ஜூஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
இதை ஐஸ் ட்ரேயில் இட்டு, ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றி எடுத்துக்கொள்ளவும்.
இந்த ஐஸ் கட்டியை உதட்டில் நன்றாகத் தேய்த்து எடுக்கவும். கலவையை ஃப்ரீஸரில் வைக்காமல், ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் இரவு தூங்கும் முன் உதட்டில் அப்ளை செய்து வந்தாலும் நல்ல பலனைக் கொடுக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கேரட் சட்னி
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பரணி!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி!
அர்த்த மண்டபத்தில் இளையராஜா தடுத்து நிறுத்தம் : அறநிலையத் துறை விளக்கம்!
அரசின் சாதனைகள்… திட்டக்குழு அறிக்கையை முதல்வரிடம் வழங்கிய உதயநிதி