பியூட்டி டிப்ஸ்: கால்களை பாதிக்கும் பாத வெடிப்பும் எளிய தீர்வுகளும்!

Published On:

| By Selvam

உடல் முழுக்க ஆரோக்கியமாக, அழகாக இருந்தாலும் கால்களை பாதிக்கக்கூடிய பாத வெடிப்பு, பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாக இருக்கும்.

தோல் வறட்சி அடைதல், அதிக உடல் எடை, வெறும் கால்களுடன் கரடுமுரடான தரைகளில் நடத்தல், எந்நேரமும் உப்புத் தண்ணீரில் கால்கள் நனைதல், நீண்ட நேரம் கால்கள் நீரிலேயே இருத்தல், நீண்ட நேரம் நிற்றல் போன்றவை பாத வெடிப்பு ஏற்பட காரணங்களாகின்றன.

இதை தடுக்க… முகத்தையும், சருமத்தையும் பாதுகாப்பது போல், பாதங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். தினமும் குளிக்கும்போது, கால் பாதங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். ஸ்கிரப்பர் கொண்டு பாதங்களைத் தேய்த்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.

வெதுவெதுப்பான நீரில் தினம் இருமுறை பாதங்களைக் கழுவ வேண்டும். பாதங்களை அழுக்கில்லாமல், எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

நிறைய தண்ணீர் குடித்தல், இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுதல். தினமும் இரவில் ஒரு டப்பில் வெந்நீர் எடுத்து, அதில் சிறிது கல்லுப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து, அந்த நீரில் பாதங்களைச் சிறிது நேரம் வைத்திருத்தல் பாத வெடிப்பு ஏற்பட்டவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் பாதப் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து, தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரோகித் சர்மா சதம் வீண்… சென்னைக்கு வெளியே முதல் வெற்றி பெற்ற சிஎஸ்கே!

தாமரைனு தான் சொன்னேன்… சோலி முடிஞ்சி! : அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: சபரீசன் சைலன்ட் ரவுண்டு… ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்! அஷ்டமி, நவமிக்கு முன் தொடங்கிய கரன்சி முகூர்த்தம்!

உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் சோதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share