மக்களவைத் தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் அமல் : அமித்ஷா உறுதி!

Published On:

| By Kavi

மக்களவைத் தேர்தலுக்குள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் வெடித்தன. சட்டம் இயற்றப்பட்ட 4 வருடங்கள் ஆகியும் இன்னும் அமல்படுத்தப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், விரைவில் சிஏஏ சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்ரவரி 10) உறுதி செய்துள்ளார்.

டெல்லி தாஜ் பேலசில் இன்று நடைபெற்ற ET நவ்-குளோபல் பிசினஸ் உச்சி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சிஏஏ என்பது இந்த நாட்டிற்கான சட்டம். இது கண்டிப்பாக அமல்படுத்தப்படும். வரும் தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். இதில் வேறு எந்த குழப்பமும் வேண்டாம்.

சிஏஏ என்பது காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. நாடு பிரிக்கப்பட்ட பின், அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டபோது, ​​அகதிகள் இந்தியாவில் வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் பின்வாங்குகிறது.

குடியுரிமை வழங்குவதற்காக சிஏஏ சட்டம் கொண்டு வரப்பட்டது. இது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. CAA என்பது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்கான ஒரு செயலாகும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் சிஏஏ சட்டத்தைக் கால்வைக்க விடமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதுபோன்று அதிமுகவும் சிஏஏ சட்டத்தை அனுமதிக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இது யாருக்கான ’வணக்கம்’? – லால் சலாம் விமர்சனம்!

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share