அமெரிக்காவில் வசிக்கும், சென்னையைச் சேர்ந்த தமிழர் ஹரிஹரசுதன் நாகராஜன். இவர் ‘டெதர்’ (TETHER ) என்ற ஆங்கிலப்படம் மூலம் அமெரிக்காவில் இயக்குநராக முத்திரை பதித்துள்ளார்.
பிடிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘டெதர்’ திரைப்படத்தில் நிக் கீட்ரிஸ், பென் பர்ட்டன், லாரா ஃபே ஸ்மித், ஜோனா கிரெட்டெல்லா, சோபியா டாசன் மற்றும் ஏரியல் ஜேம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நிக் வாக்கர் ஒளிப்பதிவு செய்ய, அலெஜாண்ட்ரா ஆர்மிஜோ படத்தொகுப்பை கையாள, காசி ஹோவெல் தயாரிப்பு வடிவமைப்புக்கு பொறுப்பேற்க, டாரில் ஜான் ஹன்னன் இசையமைத்துள்ளார். ஒலி வடிவமைப்பு: நாதன் ரூய்ல், தயாரிப்பு: நிக்கோல் வு.
23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் (CIFF) உலக சினிமா போட்டியில் கலந்து கொள்கிறது இந்தப் படம்.. TETHER என்றால் பிணைப்பு என்று பொருள்.
பட விழாவில். டிசம்பர் 18 அன்று காலை 9:45 மணிக்கு சென்னை ஐநாக்ஸ் சிட்டி சென்டரில் இரண்டாம் முறையாகத் திரையிடப்படுகிறது இந்தப் படம்.
அங்கஸ் ஹூவோராஸ் எழுதி இருக்கும் இந்தக் கதை, பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விளைவுகளை ஆராய்கிறது.
அமெரிக்கப் பள்ளி ஒன்றில் ஒரு துப்பாக்கி சூடு நடக்கிறது. அதில் லியோனார்ட் (நிக் கீட்ரிஸ்) என்பவரின் மகளும் சுட்டுக் கொல்லப்படுகிறாள்.. ஜெரால்டு (பென் பர்ட்டன்) துப்பாக்கி சூட்டின் போது பள்ளியில் பணியாற்றியவர். அதன் பின்னர் அந்தப் பள்ளியில் இருந்து வேலையை விட்டு நின்று விடுகிறார். காரணம் 15 பள்ளிக் குழந்தைகளை துப்பாக்கி சூட்டில் இருந்து காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி,
இருவரும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது. அவர்களின் மன உணர்வுகள் தான் இந்தப் படம்.
அமெரிக்காவில் திடீரென்று கூட்டத்துக்குள் யாராவது புகுந்து முன் பின் தெரியாத ஆட்களைக் கூட கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் பல அடிக்கடி நடக்கும்.
ஒரு நிலையில் அது கல்லூரி பின் பள்ளி என்று இறங்கியது.
தனிப்பட்ட வகையில் பாதிக்கப்படும் ஒரு மாணவன், அதற்கு சம்மந்தமே இல்லாத சக மாணவர்களை சுட்டுக் கொல்வது அதிகரித்தது.
பள்ளி கல்லூரிகள் வரை இந்த சம்பவங்கள் வந்தது எப்படி? அதன் பின்னால் உள்ள பிரச்னைகள் என்னென்ன? இப்படிப்பட்ட சம்பவங்களை எப்படி அமெரிக்க சமூகம் இயல்பாக சகஜமாக பார்க்கக் கற்றுக் கொண்டது என்பது பற்றி பேசும் படம் இது.
‘டெதர்‘ அமெரிக்க ஊடகங்களால் பாராட்டப்பட்ட படம் ‘டெதர்’.
‘டான்ஸ் வித் பிலிம்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் ‘என்ற திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட ‘டெதர்’ அங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ‘டெதர்’ திரைப்படம் சென்னையில் திரையிடப்படுவது குறித்து இயக்குநர் ஹரிஹரசுதன் நாகராஜன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மதுமிதா இயக்கும் புதிய படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார் ஹரிஹரசுதன்.
–-ராஜ திருமகன்
