ADVERTISEMENT

கனமழை எதிரொலி : 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை

Published On:

| By Pandeeswari Gurusamy

how many districts get leave on tomorrow oct 28

கனமழை காரணமாக இன்று (நவம்பர் 28) திருவாரூர், மயிலாடுதுறை புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு பிற்பகலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீக்கும் மேல் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் இன்று மதியம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதேபோல் மயிலாடுதுறையிலும் இன்று அரைநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் விடுமுறை அறிவித்துள்ளார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share