ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா?

Published On:

| By Jegadeesh

Hockey Will India beat Pakistan?

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் கடைசி லீக் போட்டி இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது.

கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

அதன்படி இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக விளையாடி வருகின்றன.

இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

ADVERTISEMENT

கடந்த ஜூலை 7 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ளன.

இதில், இந்திய அணி 10 புள்ளிகளுடனும், மலேசிய அணி 9 புள்ளிகளுடனும் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது. நடப்பு சாம்பியனான கொரியா மற்றும் பாகிஸ்தான் , ஜப்பான் ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் உள்ளது.

ADVERTISEMENT

இச்சூழலில் தான் இன்று (ஆகஸ்ட் 9) லீக் சுற்றின் கடைசி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜப்பான் மற்றும் சீனா, மாலை 6.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் மலேசியா மற்றும் கொரியா அணிகளும் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் லீக் சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Hockey Will India beat Pakistan?

அதன்படி, இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக இந்திய அணி உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. பின்னர், ஜப்பான் அணியுடன் மோதிய போட்டியில் ட்ரா செய்தது. பிறகு, பிறகு 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கொரியாவையும் தோற்கடித்தது. அந்த போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கும் முன்னேறியது. இப்படி பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி இருக்கிறது.

இதனிடையே புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில் சொதப்பி வருகிறது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி அடைந்தது.

பின்னர், கொரியா மற்றும் ஜப்பானுடன் டிரா கண்ட அந்த அணி முந்தைய ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்றதே இந்த தொடரின் முதல் வெற்றியாக உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு விளையாடும்.

இந்திய அணி ஏற்கனவே அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்கது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

WI vs IND: சூர்ய குமார் யாதவ் அதிரடி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா

தொடர் விடுமுறை: 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share