காமன்வெல்த் விளையாட்டில் இருந்து ஹாக்கி விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாக்ஸோ நகரில் நடைபெறுகிறது. செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தொடரில் இருந்து ஹாக்கி விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது. அதே போல ரெஸ்லிங், கிரிக்கெட் உள்ளிட்ட 10 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
காமன்வெல்த் தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் ஹாக்கி விளையாட்டு நீக்கப்பட்டிருப்பது இந்திய ஹாக்கி வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய அணியின் தற்காப்பு வீரர் ஜர்மன்பிரீத் சிங் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2024 ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றிருக்கும் நிலையில் 2026 காமன்வெல்த் விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால், தற்போது காமன்வெல்த்தில் ஹாக்கி விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமன்வெல்த் விளையாட்டில் ஹாக்கி முக்கிய அங்கமாக இருந்தது. காமன்வெல்த் தொடரை நிர்வகிப்பவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கும் காமன்வெல்த் போட்டிகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிறைவடைகிறது. 10 போட்டிகளில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கடந்த முறை பிரிங்கிங்ஹாமில் நடந்த போட்டியில் 19 விளையாட்டுகளில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அறப்போர் மீது மானநஷ்ட வழக்கு : அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!
”திண்டிவனத்தில் விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும்”: எம்பி ரவிக்குமார் கோரிக்கை!