இந்திய ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேசுடன் 16 ஆம் நம்பர் ஜெர்சியும் விடைபெறுகிறது … பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றார். இனி பயிற்சியாளராக பயணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ராகுல் டிராவிட் போல ஜூனியர்களுடன் எனது பயணத்தை தொடங்க உள்ளதாகவும்,  ஜூனியர்களை சீனியர் அணியில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 2032-ஆம் ஆண்டு இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாகவும் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தினால் இந்திய அணியின் பயிற்சியாளராக தான் இருக்க விரும்புவதாகவும் ஸ்ரீஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, 36 வயதான ஸ்ரீஜேஷ், தன்னுடைய 18 ஆண்டு கால ஹாக்கி வாழ்க்கையில் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேஷ், ஓய்வு பெற்றதையடுத்து அவர் அணிந்து விளையாடும் 16 ஆம் எண் ஜெர்சிக்கும் இந்திய ஹாக்கி சம்மேளனம் விடை கொடுத்துள்ளது.

இனிமேல், இந்த எண் ஜெர்சி எந்த வீரருக்கும் வழங்கப்பட மாட்டாது. 18 வருட காலம் இந்திய அணிக்கு அவர் ஆற்றிய சேவைக்காகவும், அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்றதையடுத்து, இத்தகைய அரிய கௌரவம் ஸ்ரீஜேசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றதையடுத்து டெல்லியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரீஜேஷ் மனைவி குழந்தைகளுடன் பங்கேற்றார். ஏராளமான முன்னாள் ஹாக்கி வீரர்களும் பங்கேற்றனர். இந்திய அணியின் தற்போதைய வீரர்கள் பி.ஆர். ஸரீஜேஷ் என்ற பெயர் பொறிக்கப்பட்ட 16 ஆம் எண் ஜெர்சி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

ஆவணி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

‘கல்கி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share