பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த இருவருக்கு இந்துத்துவா அமைப்புகள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு கெளரி லங்கேஷ் பெங்களூரில் உள்ள தனது வீட்டின் முன்பாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலை தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இரண்டு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர்கள் இருவரும் பெங்களூரு மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போது அவர்களுக்கு சங் பரிவார் மற்றும் ஸ்ரீராம் சேனா ஆகிய இந்து அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.
“Bail is the Rule “. only for Murderers and Rapists in this Country… Disgusting… #justasking https://t.co/EbAbUCfbSw
— Prakash Raj (@prakashraaj) October 13, 2024
இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “இந்த நாட்டில் கொலை செய்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மட்டுமே ஜாமீன் வழங்கப்படுவது என்பது அருவருப்பானது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 25 பேரில் 18 பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…