நாடாளுமன்றத்தில் தேவாரம்- ஆனால் இந்தியே துறைதோறும்…

Published On:

| By Aara

மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றத் திறப்பின் போது தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து தேவார தமிழ்த் திருமறைகளை ஒலிக்கச் செய்து செங்கோல் நிறுவி பயபக்தியோடு வணங்கினார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் பாருங்கள் மோடி என்று பாஜகவினர் பறைசாற்றினர்.

ஆனால் இரண்டே நாட்களில் மே 30 ஆம் தேதி மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மத்திய அரசு எல்லா துறைகளிலும் இந்தியை புகுத்த எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அலுவலகப் பணிகளில் இந்தி மொழியை புகுத்த உதவும் வகையில் மத்திய அரசு இந்தி ஆலோசனைக் கமிட்டியை அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி இந்தியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மத்திய இரசாயன, உரத் துறையின் இந்தி ஆலோசனைக் குழுவின் கூட்டம் மே 30 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய மத்திய இரசாயனத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா,

“அரசு விவகாரங்களில் இந்தி நமது சுயமரியாதையின் சின்னமாக மாறி வருகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கான தேசிய அளவிலான முயற்சிகளில் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் தங்களது அலுவலகப் பயன்பாட்டிற்கு இந்தி மொழியை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை எட்ட நமக்குள் இந்தி மொழி இணக்கத்தை உருவாக்குகிறது.

இந்தப் பொறுப்பை ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் உணர்ந்து செயல்படுகிறது.

இந்தி மொழியை நமது தேசத்தின் சின்னமாகவும், கலாச்சார ஒருமைப்பாடாகவும், ஒட்டு மொத்த தேசப்பற்றின் பிரதிபலிப்பாகவும் உள்துறை அமைச்சகம் அங்கீகரித்திருக்கிறது.

உள்துறை அமைச்சரும் நாடாளுமன்ற அலுவலக மொழி கமிட்டியின் தலைவருமான அமித் ஷா தனது உள்துறையில் ஒவ்வொரு செயல்பாடும் இந்தியில் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

அதேபோல பிரதமர் மோடியும் சர்வதேச அளவிலான கூட்டமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, அடிக்கடி இந்தியில் உரையாற்றுவதை இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டும்” என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர்.
வேந்தன்

45 நாள் கெடு: மோடி அரசை எச்சரித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு!

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share