சென்னையில் இங்குதான் அதிகபட்ச வெப்பம் – வெதர்மேன் ஹாட் ரிப்போர்ட்!

Published On:

| By indhu

சென்னையில் மீனம்பாக்கத்தில் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் இன்று (மே 5) தெரிவித்துள்ளார்.

அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நேற்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் 17 இடங்களில் நேற்று வெயில் அளவு 100 டிகிரி செல்சியஸை கடந்தது.

மேலும், இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். தொடர்ந்து, வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் இன்றைய வானிலை குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “மீனம்பாக்கத்தில் இன்று (மே 5) 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். சேலம் ஏற்காடு, வால்பாறை, கொடைக்கானல், தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பகுதிகளில் முதலிடத்தில் உள்ள கரூரில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஈரோடு அல்லது கரூரை விட வேலூரில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகலாம்” என தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டி20க்கான இந்திய அணியில் நடராஜனுக்கு இடமில்லையா? ஷேன் வாட்சன் ஓபன் டாக்!

தெலுங்கு இயக்குநர்களின் கூட்டணியில் தனுஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share