உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் (MHA) இன்று (ஏப்ரல் 21) அனைத்து நிதி ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க நிறுவனங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், உயர்தர போலி 500 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக கூறியுள்ளது. High-quality fake Rs. 500 notes in circulation
நாடு முழுவதும் கள்ள நோட்டுகள் புழக்கம் இருப்பதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமே எச்சரிக்கை விடுத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உண்மையான 500 ரூபாய் நோட்டுக்கும், போலியான 500 ரூபாய் நோட்டுக்கும் வித்தியாசமே இல்லாமல் இருப்பதாகவும், எந்தவகையிலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் உயர்ரகத்தில் புழக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், போலி ரூபாய் நோட்டுகள் உண்மையான ரூபாய் நோட்டுகளுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டிருந்தாலும், “RESERVE BANK OF INDIA” என்ற சொற்றொடரில் ஒரு “எழுத்துப்பிழை” உள்ளது. அதாவது ‘E’ க்கு பதிலாக ‘A’ என்ற எழுத்து இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது.
எனவே, நிதித்துறை, வங்கிகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கையாளும் நிறுவனங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நிதியமைப்புகளுக்கு போலி ரூபாய் நோட்டுகளின் புகைப்படத்துடன் எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டுள்ள்து. High-quality fake Rs. 500 notes in circulation
மக்களும் சந்தேகத்துக்கு உரிய போலி ரூபாய் நோட்டுகளைப் பார்த்தால் உடனடியாக அது குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. High-quality fake Rs. 500 notes in circulation
