வங்கித் துறையை சீரமைக்க உயர்மட்ட குழு…. நிறுவனப் பத்திரங்களில் மாற்றம்!

Published On:

| By Kavi

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கித் துறை சீரமைப்பு குறித்த உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர்,  “ இந்தக் குழு நிதித் துறையை விரிவாக ஆய்வு செய்து, நிதி நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும். அதே நேரம், வங்கித்துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஏற்ப அதைச் சீரமைக்கும்.

ADVERTISEMENT

பொதுத்துறை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் மின் நிதி நிறுவனமும், கிராமப்புற மின்மயமாக்கல் கழகமும் மறுசீரமைக்கப்படும்.

மத்திய பட்ஜெட் 2026-27-ல், நிறுவனப் பத்திரங்கள் மீதான மாற்றங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. பெரு நகரங்கள், அதிக மதிப்புள்ள கடன் பத்திரங்களை வெளியிடுவதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.1000 கோடிக்கு மேற்பட்ட ஒற்றைக் கடன் பத்திர வெளியீட்டிற்கு ரூ.100 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ADVERTISEMENT

அமரித் திட்டதின கீழ் செயல்படுத்தபடும்,  ரூ. 200 கோடி வரையிலான கடன் பத்திர வெளியீடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. இது சிறிய மற்றும்  நடுத்தர நகரங்களுக்கும் தொடந்து ஆதரவளிக்கும்.

ரூ. 200 கோடி வரையிலான பத்திர வெளியீடுகளுக்கு ஊக்கமளிக்கும் அம்ருத் திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய திட்டமும், சிறிய, நடுத்தர நகரங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share